Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையில் கனமழையால் ராஜரத்தினம் மைதானம் கூரை பறந்தது- அதிர்ச்சி வீடியோ இதோ..!!

சென்னை: சென்னையில் உள்ள பிரபல ராஜரத்தினம் மைதானத்தில் இன்று ஒரு பரபரப்பான அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானத்தில் பெரும்பாலும் காவல்துறை தொடர்பான அணிவகுப்பு மற்றும் பயிற்சி விளையாட்டுகள் நடைபெறும்.

சென்னை எழும்பூரின் அடையாளமாக விளங்கிய இந்த மைதானம் கடந்த 2009ஆம் ஆண்டு தான் புதுப்பிக்கப்பட்டது.

வெளுத்து வாங்கிய மழை

வெளுத்து வாங்கிய மழை

இந்த நிலையில் சென்னையில் இன்று திடீரென்று மழை வெளுத்து வாங்கியது. மேகவெடிப்பு என்று கூறப்படும், ஒரு சில நொடிகளில் அதிகபட்ச மழை கொட்டும் சம்பவம் இன்று நகரின் பல்வேறு பகுதியில் அரங்கேறியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீர் போல் தேங்கியுள்ளது

கூரைகள் பறந்தன

கூரைகள் பறந்தன

சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தையும் மழை விட்டு வைக்கவில்லை. அப்போது வீசிய சூறைக்காற்றால் மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கூரைகள், காற்றில் அடித்து பறந்தது. இதில் ஒரு கூரை கேலரியில் இருந்தவர்கள் பக்கம் பறந்து சென்று விழுந்தது

அதிர்ச்சி வீடியோ

இதனால் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த மக்கள், அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த விபத்தில் யாரும் காயமடைய வில்லை. இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளனர். பரபரப்பான இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பயிற்சி பாதிப்பு

பயிற்சி பாதிப்பு

இந்த கன மழையால் சென்னை நகரில் உள்ள பல்வேறு சர்வதேச விளையாட்டு மைதானங்களும் சேதம் அடைந்துள்ளன. மைதானத்திலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல்வேறு விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, December 30, 2021, 22:16 [IST]
Other articles published on Dec 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+