For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா vs நியூசி போட்டி நாளை நடைபெறாது.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. காரணம் இது தான் !

ஹாமில்டன் : நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டி20 போட்டியில் இந்திய அணி ஏற்கனவே ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
306 ரன்கள் எடுத்தும் இந்திய அணியால் அந்த இலக்கை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது .ஆனால் அது அனைத்தும் வீணாக போக அதிக வாய்ப்பு இருக்கிறது. காரணம் நாளை ஹாமில்டனில் 90% மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மாற்ற வேண்டிய நிலை

மாற்ற வேண்டிய நிலை

இதன் காரணமாக நாளை நிச்சயம் போட்டி திட்டமிட்டபடி 7:00 மணிக்கு தொடங்கியது என எதிர்பார்க்கப்படுகிறது. மழை அடிக்கடி குறிக்கிடும் என்பதால் போட்டி தாமதமாக தொடங்கினாலும் அது நிறைவு பெற வாய்ப்பு இல்லை என்று ஹாம்டன் உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். நாளை மழை குறிக்கிடு இருக்கும் என்றால் ,இந்திய அணி தங்களுக்கு யுத்திகளை முற்றிலும் மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

மழை ஏற்பட்டால் நிச்சயம் சுழற்பந்து வீச்சு நியூசிலாந்து ஆடுகளத்தில் எடுபடாது. வானமும் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் நிச்சயமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தான் கூடுதல் பலம் ஆகக் கிடைக்கும் இதன் காரணமாக தீபக்சாகரை நான்காவது வேக பந்துவீச்சாளராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் ரிஷப் பண்டை நீக்கிவிட்டு தீபக்சாகரை பிளேயிங் லெவனில் கொண்டு வரப்படலாம்.

 முடிவுக்கு வருகிறது

முடிவுக்கு வருகிறது

நியூசிலாந்து அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 13 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது. இதனால் நாளை மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் நியூசிலாந்தின் சாதனையும் முடிவுக்கு வரும். நியூசிலாந்தில் கடைசியாக நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 26, 2022, 23:09 [IST]
Other articles published on Nov 26, 2022
English summary
Heavy rain threat for india vs newzealand 2nd odi 2022இந்தியா vs நியூசி போட்டி நாளை நடைபெறாது.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. காரணம் இது தான் !
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+