Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் சிக்சர், முதல் டக் அவுட்... நடப்பு உலக கோப்பை தொடரின் 'முதல்' சாதனைகளும், சோதனைகளும்!

கிறைஸ்ட்சர்ச்: நடப்பு உலக கோப்பையின் முதல் நாள் ஆட்டங்கள் இன்று நடைபெற்ற நிலையில், இதில் நிகழ்த்தப்பட்ட முதல் சாதனை மற்றும் சோதனைகள் குறித்த ஒரு பார்வை:

*11வது உலக கோப்பையின் முதல் ஆட்டம் நியூசிலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையே கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில், நடைபெற்றது.

Here are all the firsts of ICC World Cup 2015

*முதல் போட்டியில் டாஸ் வெற்றி பெற்றது இலங்கை கேப்டன் ஆங்லோ மேத்யூஸ்.

*முதல் பந்தை வீசியது இலங்கை வீரர் குலசேகராவாகும். இவர்தான் கடந்த உலக கோப்பையின் இறுதி பந்தை வீசியவர்.

*முதல் பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் நியூசிலாந்தின், மார்டின் குப்தில் ஆகும்.

*முதல் வைட் பந்து குலசேகராவால் வீசப்பட்டது. முதல் ஓவரின் 3வது பந்தை அவர் வைடாக வீசினார்.

*முதல் ஃபோர் ரன், நியூசிலாந்தின் மெக்கல்லத்தால் அடிக்கப்பட்டது. முதல் ஓவரின் ஆறாவது பந்தில் அவர் பவுண்டரி விளாசினார். முதல் சிக்சரையும் மெக்கல்லம் விளாசினார். மலிங்கா பந்தில் சிக்சர் பறந்தது. இந்த உலக கோப்பையின் முதல் அரை சதத்தையும் மெக்கல்லமே எடுத்தார். மேலும் உலக கோப்பையின் முதல் விக்கெட்டாகவும் அவரே வீழ்ந்தார்.

*உலக கோப்பையில் முதல் விக்கெட்டை இலங்கையின் ரங்கனா ஹீரத் எடுத்தார்.

*உலக கோப்பையின் முதல் மெய்டன் ஓவரை நியூசிலாந்தின் டிம் சவுத்தி வீசினார். 3வது ஓவரில் தில்ஷன் பந்துகளை எதிர்கொண்ட போது மெய்டன் பெற்றார் சவுத்தி.

*முதல் கேட்ச் ஹீரத் பந்து வீச்சில் மெக்கல்லம் கொடுத்த கேட்சை ஜீவன் மென்டிஸ் பிடித்தார்.

*மென்டிஸ் பந்து வீச்சில் ரோஸ் டெய்லரை, சங்ககாரா ஸ்டம்பிங் செய்ததுதான், இந்த உலக கோப்பையில் முதலாவது ஸ்டம்பிங் ஆகும்.

*முதல் டக் என்ற மோசமான சாதனை, இலங்கையின் மகிலா ஜெயவர்த்தனேக்கு கிடைத்தது. 4 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், வெட்டோரி பந்து வீச்சில் லூக் ரோன்சியிடம் கேட்ச் கொடுத்து அவர் டக் அவுட் ஆனார்.

*முதல் செஞ்சுரி அடித்த பெருமை ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்சுக்கு கிடைத்தது. அவர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மொத்தம் 135 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

*முதல் ஹாட்ரிக் சாதனையை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்தின் ஸ்டீவன் ஃபின் நிகழ்த்தினார்.

Story first published: Saturday, February 14, 2015, 13:12 [IST]
Other articles published on Feb 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+