கொல்கத்தா: ஐபிஎல் சீசன் 8 தொடரில் நேற்று முதல் ஆட்டம் கொல்கத்தா-நைட் ரைடர்ஸ் மற்றும், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில், டாஸ் முதல் வெற்றி வரையில், இடையில் நடைபெற்ற 'முதல்களை' பற்றிய ஒரு பார்வை இதுதான்.

நடப்பு ஐபிஎல் போட்டியின் முதல் டாசில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியாகும். அந்த அணியின் கேப்டன் கம்பீர் டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
முதல் பந்தை உமேஷ் யாதவ் வீச, மும்பையின் ரோகித் ஷர்மா எதிர்கொண்டார்.
முதல் பவுண்டரி, ஆரோன் பின்ச்சால் அடிக்கப்பட்டது.
முதல் விக்கெட்டாக வீழ்ந்ததும், ஆரோன் பின்ச்தான். முதல் விக்கெட்டை வீழ்த்தியது மோர்னே மோர்க்கல். அவரின் பந்து வீச்சில் பின்ச் 5 ரன்களில் யாதவிடம் கேட்ச் கொடுத்தார். எனவே அதுதான் நடப்பு ஐபிஎல்லின் முதல் கேட்சாக அமைந்தது.
சகிப் அல் ஹசன் பந்தில் ரோகித் ஷர்மா விளாசியது நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சிக்சராகும்.
மும்பையின், அம்பத்தி ராயுடு, நடப்பு சீசனின் முதல் டக் அவுட் பேட்ஸ்மேன். மோர்க்கல் பந்தில் யூசுப் பதானிடம் அவர் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முதல் மெய்டன் ஓவரை வீசிய பெருமை மோர்க்கலுக்கு கிடைத்தது. போட்டியின் ஆறாவது ஓவரை மெய்டனாக வீசினார் மோர்க்கல்.
முதல் அரை செஞ்சுரி ரோகித் ஷர்மாவால் விளாசப்பட்டது.
முதல் வெற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சால் பெறப்பட்டது.