
இறுதிப்போட்டியில் நியூசிலாந்து
கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணி சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளைத் தனது சொந்த மண்ணில் வீழ்த்தி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு இடத்திற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

தொடரின் விளிம்பில் ஆஸ்திரேலியா
தென் ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டு அணியுடன் நடக்க இருந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்ததது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, தொடரிலிருந்து ஏறக்குறைய ஆஸ்திரேலியா வெளியேறிவிட்டது.

இந்தியாவுக்கு குறைந்த வாய்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1, 2-0, 3-0, 3-1 அல்லது 4 -0 என்ற ஏதோ ஒரு புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றால் போதும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட முடியும். இந்நிலையில் சென்னையில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் இங்கிலாந்து இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து இந்தியா வெளியேற வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து செய்ய வேண்டியவை
நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0, 3-1 அல்லது 4 - 0 என்ற ஏதோ ஒரு புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்துக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

அதிர்ஷ்டம் உள்ளதா ஆஸ்திரேலிய அணிக்கு
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியும். இந்தியா 1 - 0 கணக்கில் வென்றாலோ, 1-0, 2-0, 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றாலோ ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு செல்லும். மேலும் இரு அணிகளும் 1 -1 அல்லது 2 - 2 என டிரா செய்தாலும் ஆஸி. அணிக்கு வாய்புள்ளது.


Click it and Unblock the Notifications