Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மலர், பலூன் அலங்காரத்திற்கு நடுவே, ஹோட்டல் அறையில் கேக் வெட்டி ஹேப்பி பர்த் டே கொண்டாடிய கோஹ்லி!

ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம், விராட் கோஹ்லி, இன்று தனது 28வது பிறந்த நாளை ராஜ்கோட், நட்சத்திர ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாடினார்.

இங்கிலாந்துக்கு எதிரான, முதலாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் 9ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ராஜ்கோட் சென்றுள்ளார், இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி.

Here are Virat Kohli birthday pics from Rajkot

அங்குள்ள இம்பீரியல் ஹோட்டலில் விராட் கோஹ்லி கேக் வெட்டி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். 18ம் நம்பர் ஜெர்சியை விராட் கோஹ்லி அணிந்திருந்ததை போன்ற பிம்பத்தோடு உருவாக்கப்பட்ட கேக் மற்றும், சாக்லேட் பிளேவரிலான வட்ட வடிவு கேக்குகளை அவர் வெட்டினார்.

Here are Virat Kohli birthday pics from Rajkot

ஹோட்டல் அறைகள் மலர்களாலும், பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. விராட் கோஹ்லியின் புகைப்படங்களை குஜராத்திலுள்ள சிராக் சவுதாலியா நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இதனிடையே காதலி அனுஷ்கா ஷர்மா, கோஹ்லிக்கு பிறந்த நாள் பரிசளிக்க ராஜ்கோட் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Here are Virat Kohli birthday pics from Rajkot
Story first published: Saturday, November 5, 2016, 17:31 [IST]
Other articles published on Nov 5, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+