Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

50 பேரு இருக்காங்க.. யாரு வேணுமோ அள்ளிக்கங்க.. ஆனா ஆளுக்கு 5 பேருதான், ஞாபகம் வச்சுக்கங்க!

மும்பை: இதோ புதுக் குட்டிகள் ராஜ்கோட்டும், புனேயும் தங்களுக்குப் பிடித்த வீரர்களைத் தேர்வு செய்ய தயாராகி விட்டனர். நாளை நடைபெறப் போகும் புதிய அணிகளுக்கான வீரர்கள் தேர்வுக்காக 50 வீரர்கள் கொண்ட வரைவுப் பட்டியலை ஐபிஎல் நி்ர்வாகம் வெளியிட்டுள்ளது. இதிலிருந்து புதிய அணிகள் இரண்டும், ஆளுக்கு ஐந்து பேரைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்படாத மற்ற 40 வீரர்களையும் பொது ஏலத்தில் விடுவார்கள். அதில் மற்ற அணிகளும் இணைந்து அவர்களைத் தேர்வு செய்யும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு மாற்றாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணிகள்தான் ராஜ்கோட்டும், புனேவும். இந்த அணிகளுக்கான அணி உருவாக்கம் நாளை தொடங்குகிறது.

50 பேர் கொண்ட பட்டியல்

50 பேர் கொண்ட பட்டியல்

இந்த இரு அணிகளுக்காக சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்களை உள்ளடக்கிய 50 வீரர்கள் கொண்ட பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஆளுக்கு 5 பேர்

ஆளுக்கு 5 பேர்

இந்தப் பட்டியலிலிருந்து இரு அணிகளும் தங்களுக்குப் பிடித்த வீரர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஆளுக்கு 5 பேரை மட்டுமே இரு அணிகளும் அதிகபட்சம் தேர்வு செய்து கொள்ளலாம்.

மற்ற 40 பேரும் ஏலத்தில்

மற்ற 40 பேரும் ஏலத்தில்

தேர்வு செய்யப்படும் 10 வீரர்கள் போக மற்ற 40 பேரையும் பொது ஏலத்திற்குக் கொண்டு வருவார்கள். அதில் மற்ற அணிகளும் கலந்து கொண்டு ஏலத்தில் எடுப்பார்கள்.

33 இந்திய வீரர்கள்

33 இந்திய வீரர்கள்

இந்த 50 வீரர்களில் 33 பேர் இந்திய வீரர்கள் ஆவர். 17 பேர் வெளிநாட்டு வீரர்கள். டோணி, அஸ்வின் ஆகியோர் இதில் மிக முக்கியமான வீரர்கள். வீரர்கள் பட்டியலில் உள்ள வீரர்கள் விவரம்:

அஸ்வின் - பின்னி

அஸ்வின் - பின்னி

ஆர். அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, டோணி, ரவீந்திர ஜடேஜா, தவல் குல்கர்னி, அபிஷேக் நய்யார், ஆ்சிஷ் நேஹ்ரா, இர்பான் பதான், அஜிங்கியா ரஹானே.

ரெய்னா - சஞ்சு சாம்சன்

ரெய்னா - சஞ்சு சாம்சன்

சுரேஷ் ரெய்னா, சஞ்சு சாம்சன், மோஹித் சர்மா, தீபக் ஹூடா, ராகுல் சர்மா, பாபா அபராஜித், அனுகுஷ் பயன்ஸ், ரஜத் பாட்டியா, எகல்வ்யா திவிவேதி, விக்ரம்ஜித் மாலிக், மிதுன் மன்ஹாஸ், ரோனித் மோரே.

கருண் நாயர்

கருண் நாயர்

கருண் நாயர், பவன் நேகி, ஈஷ்வர் சந்திர பாண்டே, பிரதீப் சாஹு, தினேஷ் சலுங்கே, பரீந்தர் சிங் சரன், அங்கி்த் நாகேந்திர சர்மா, பிரத்யுஷ் சிங், பிரவீன் தாம்பே, ராகுல் டெவேதியா, சாகர் விஜய் திரிவேடி, திஷாந்த் யக்னிக், கைல் அப்பாட்.

பிராவோ - பாப் டூபிளசிஸ்

பிராவோ - பாப் டூபிளசிஸ்

சாமுவேல் பத்ரி, வேயன் பிராவோ, பென் கட்டிங், பாப் டூபிளசிஸ், ஜேம்ஸ் பால்க்னர், மாட் ஹென்றி, மைக்கேல் ஹஸ்ஸி, பிரன்டன் மெக்கல்லம், கிறிஸ்டோபர் மோரிஸ்

ரிச்சர்ட்சன் - ஸ்டீவ் ஸ்மித்

ரிச்சர்ட்சன் - ஸ்டீவ் ஸ்மித்

கனே ரிச்சர்ட்சன், வேயன் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித், டிம் செளதி, ஜுவன் தெரான், ஆண்ட்ரூ டை, ஷான் வாட்சன்.

Story first published: Monday, December 14, 2015, 17:09 [IST]
Other articles published on Dec 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+