Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டெஸ்ட்: கோஹ்லி, புஜாரா அசத்தல் சதம்.. முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்!

விசாகபட்டினம்: விசாகபட்டினத்தில் தொடங்கியுள்ள இங்கிலாந்துக்கு எதிராான 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ரன்களை குவித்துள்ளது.

முன்னதாக, கம்பீருக்கு பதிலாக ஓபனிங்கில், கமிளக்கப்பட்ட ராகுல் 5 பந்துகளை சந்தித்த நிலையில் டக்அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் 20 ரன்களில் நடையை கட்டினார். 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்த நிலையில், புஜாரா-கேப்டன் கோஹ்லி ஜோடி அணியை மீட்டெடுத்தது.

Here is the probable India XI for 2nd Test against England

அணியின் ஸ்கோர் 248ஆக உயர்ந்தபோது, புஜாரா 119 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரஹானே 61 பந்துகளில் 23 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். இதையடுத்து அஸ்வின் களம்புகுந்தார். ஆட்ட நேர இறுதியில் விராட் கோஹ்லி 151 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

தனது 50வது டெஸ்ட் போட்டியில் களம் கண்டுள்ள விராட் கோஹ்லி சதம் விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். இது அவரின் 14வது டெஸ்ட் சதமாகும். இந்த வருடத்தில் இது 3வது சதம்.

முன்னதாக, இந்திய டெஸ்ட் அணியில் சுழற்பந்து ஆல்-ரவுண்டர் ஜெயந்த் யாதவ் முதல் முறையாக சேர்க்கப்பட்டார். இவருக்காக, லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, கவுதம் கம்பீர் வெளியேற்றப்பட்டுள்ளார். கம்பீர் 2வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்திருந்த நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவ்விரு மாற்றங்களும் இந்திய அணியில் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல இங்கிலாந்து அணியில் காயத்திலிருந்து மீண்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் களம் கண்டார். இந்திய தரப்பில் வீழ்ந்த 4 விக்கெட்டுகளில் மூன்று அவருக்குத்தான். பிராட் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ராஜ்கோட் டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா ஆகியோரின் சுழலை எளிதாக சமாளித்த இங்கிலாந்து அணியினர் இரு இன்னிங்சிலும் சேர்த்து 4 சதங்கள் விளாசினர். இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

நாளை பிற்பகலில் இருந்தே ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பும் என்று பிட்ச் பராமரிப்பாளர் கஸ்தூரி ஸ்ரீராம் கூறியுள்ளார். எனவே முதல் இன்னிங்சில் ரன் குவிக்க வேண்டியது இந்தியாவுக்கு கட்டாயமாகும்.

இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, அஜிங்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், விருதிமான் சாஹா (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

இங்கிலாந்து: அலிஸ்டர் குக், ஹசீப் ஹமீத், ஜோ ரூட், பென் டக்கெட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜோனி பைர்ஸ்டோ, ஜபார் அன்சாரி, அடில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்சன்.

Story first published: Thursday, November 17, 2016, 17:19 [IST]
Other articles published on Nov 17, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+