Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2023 - பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெற 4 காரணங்கள்.. சாதகமாக விளங்கும் சூழல்

சென்னை : ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை பிளே அப் சுற்றுக்கு சென்ற அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். கடைசியாக 2020 மற்றும் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை.

ஆனால், இம்முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கான நான்கு காரணங்கள் குறித்து தற்போது காணலாம்.

தோனிக்கு தற்போது 41 வயது ஆவதால், இது கடைசி ஐபிஎல் தொடராக தோனிக்கு இருக்கலாம். இதனால் சாம்பியன் பட்டத்தை வெல்வது மிகவும் முக்கியமாகும்.

சேப்பாக்கம் மைதானம்

சேப்பாக்கம் மைதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுதால் இது சிஎஸ்கே அணிக்கு மிகவும் சாதகமாக பார்க்கப்படுகிறது. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல குறைந்தது 8 போட்டிகள் வென்று ஆக வேண்டும். சிஎஸ்கே அணி சென்னையில் மட்டும் 7 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் ஏழு போட்டியிலும் சிஎஸ்கே வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது அப்படி இல்லை என்றாலும் குறைந்தது 5 போட்டியிலாவது சிஎஸ்கே வெல்லலாம்.

சுழற்பந்துவீச்சு படை

சுழற்பந்துவீச்சு படை

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் ஆடுகளத்தை கொண்டுள்ளது. கடைசியாக சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா, இந்தியா மோதிய ஒருநாள் போட்டியிலேயே அதற்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடும். ஜடேஜா, மொயின் அலி, இலங்கை வீரர் தீக்சனா ஆகியோர் இருப்பதால், சென்னையில் எதிரணி பேட்ஸ்மேன்கள் கடுமையாக சவால்களை சந்திக்க போகிறார்கள்.

அதிரடி பேட்ஸ்மேன்கள்

அதிரடி பேட்ஸ்மேன்கள்

இதே போன்று சென்னை அணியின் பேட்டிங்கும் நல்ல வலுவாக உள்ளது. ருத்துராஜ் கெய்க்வாட் , ஸ்டோக்ஸ், ஜடேஜா, தோனி, ராயுடு போன்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால், நிச்சயம் எவ்வளவு பெரிய இலக்கை வேண்டுமானாலும் எளிதாக எட்டிவிட முடியும். இதனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பலமாக இருப்பதால், பிளே ஆஃப் சுற்று எட்டாக்கணியாக இருக்காது

தோனி யுத்தி

தோனி யுத்தி

இம்பேக்ட் பிளேயர் விதி எந்த அணிக்கு கை கொடுக்குமோ இல்லை, அது சிஎஸ்கேவின் தலை எழுத்தையே மாற்றிவிடும். களத்தில் யுத்திகளை வைத்து விளையடுவதில் தோனி மிகப் பெரிய ஜாம்பவான். இதனால் எந்த வீரரை எப்போது மாற்றி எதிரணிக்கு அதிர்ச்சி கொடுக்க முடியும் என்று தோனிக்கு தெரியும். இதனால் சிஎஸ்கேக்கு இம்முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

Story first published: Friday, March 24, 2023, 14:52 [IST]
Other articles published on Mar 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+