Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஏமாத்தீட்டாங்களே பரமா !!. கோலி - ஆர்சிபி இடையே நடந்த கடைசி நேர மீட்டிங்.. பரபர தகவல்கள்!!

பெங்களூரு: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் விவகாரத்தில் ரசிகர்களிடையே புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் யார் என்பது குறித்து நீண்ட நாட்களாக அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதற்கு காரணம் விராட் கோலியுடன் ஆர்சிபி அணியின் நிர்வாகம் நடத்தி வந்த பேச்சுவார்த்தை தான்.

காரணம் என்ன

காரணம் என்ன

விராட் கோலி கடந்த சீசனின் போதே வழங்கியிருந்த ராஜினாமா கடிதத்தை இத்தனை நாட்கள் ஆகியும் ஆர்சிபி நிர்வாகம் ஏற்காமலேயே இருந்ததாக தெரிகிறது. மேலும் அவரை கேப்டனாக நியமிக்கவும் சமாதானப்படுத்தி வந்துள்ளது. இதற்கு சான்றையும் புகைப்படங்கள் வழியாக ஆர்சிபி அணியே வெளியிட்டது.

புகைப்பட ஆதாரம்

புகைப்பட ஆதாரம்

கேப்டன் அறிவிப்புக்காக உருவ கட் அவுட்களின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் கண்டுபிடிப்பதற்காக கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் கூட விராட் கோலியின் உருவம் தான் இருக்கிறது என ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இதனால் கோலி தான் கேப்டன் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.

கோலியின் முடிவு

கோலியின் முடிவு

ஆனால் ஆர்சிபியின் கோரிக்கையை கடைசி வரை விராட் கோலி ஏற்கவில்லை. 9 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டும் ஒரு முறை கூட கோப்பை வென்றுக் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது. மீண்டும் அதுபோன்று நடந்துவிட்டால் விராட் கோலிக்கு பெரிய அவமானமாக மாறிவிடும். இதனால் அவர் பின் வாங்கினார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன்சி அனுபவம்

கேப்டன்சி அனுபவம்

விராட் கோலியை போன்றே கேப்டன்சியில் சிறந்த அனுபவம் உள்ளவர் ஃபாப் டூப்ளசிஸ். தென்னாப்பிரிக்க அணியை சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் வழிநடத்தியுள்ளார். இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கேவுக்காக விளையாடி நல்ல அனுபவம் பெற்றுள்ளார். தோனிக்கே இவர் சில நேரங்களில் ஐடியாக்கள் கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 12, 2022, 18:49 [IST]
Other articles published on Mar 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+