Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த அணிக்கு யார் கேப்டன், பரிசு தொகை எவ்வளவு.. ஐபிஎல் தொடர் பற்றிய முழு விவரம்!

சென்னை: ஐபிஎல் 8வது சீசன் ஆட்டங்கள் நாளை தொடங்க உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவை இரண்டும் கொல்கத்தாவில் வைத்து நடக்கின்றன.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் குறித்தும், அணிகள் குறித்தும், ஒரு பார்வை அவசியமானது. உலக அளவில் பிரபலமாகியுள்ள இந்த ஐபிஎல் தொடர் பற்றிய ஒரு கண்ணோட்டம், புள்ளி விவரம் இதோ:

தொடக்க விழா

தொடக்க விழா

மொத்தம், 8 அணிகள் பங்கேற்கும், நடப்பு சீசன் தொடருக்கான, தொடக்க விழா இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பாலிவுட் பிரபலங்களின் ஆட்டம், பாட்டம் இதில் உண்டு. கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் இது நடைபெறுகிறது.

யுவராஜ்சிங்

யுவராஜ்சிங்

இந்த தொடரில் மிகவும் காஸ்ட்லியான வீரர் என்றால், யுவராஜ்சிங்தான். அவர் 16 கோடிக்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

பரிசுகள்

பரிசுகள்

வெற்றி பெற்ற அணிக்கு ரூ.15 கோடி பரிசு தொகை கிடைக்கும். 2வது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி கிடைக்கும். அதிக ரன் குவித்த வீரருக்கு ஆரஞ்சு தொப்பி, அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கு ஊதா தொப்பி, சமத்தான வீரர், சிறப்பாக முன்னேறி வரும் வீரர், சிறந்த கேட்ச் போன்ற பிரிவுகளிலும் விருதுகள் உண்டு.

ஸ்டேடியங்களின் கொள்ளளவு

ஸ்டேடியங்களின் கொள்ளளவு

மொத்தம் 12 ஸ்டேடியங்களில் ஆட்டங்கள் நடக்க உள்ளன. அகமதாபாத் ஸ்டேடியம் 54 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளிக்க வசதியானது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்-36760, சென்னை சிதம்பரம் ஸ்டேடியம் 37220, டெல்லி பெரோசா கோட்லா-55 ஆயிரம், கோல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியம்-66,349, மொஹாலி பஞ்சா் கிரிக்கெட் சங்க ஸ்டேடியம்-40000, மும்பை வான்கடே-33,482, மும்பை பிராபர்ன் ஸ்டேடியம்-20 ஆயிரம், புனே எம்சிஏ மைதானம்-36ஆயிரம், ராய்ப்பூரின் சட்டீஸ்கர் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்-50 ஆயிரம், விசாகபட்டணம் ஸ்டேடியம்-25 ஆயிரம் ரசிகர்களின் கொள்ளளவை தாங்க உள்ளது.

கேப்டன்கள் யார்

கேப்டன்கள் யார்

சென்னை சூப்பர் கிங்சின் கேப்டன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான டோணியாகும். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் ஜேபி டுமினி கேப்டன், பஞ்சாப்புக்கு, ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி கேப்டன், கொல்கத்தாவுக்கு கம்பீரும், மும்பைக்கு ரோகித் ஷர்மாவும், பெங்களூருவுக்கு விராட் கோஹ்லியும், ராஜஸ்தானுக்கு ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனும், ஹைதராபாத்துக்கு, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் கேப்டன்களாக செயல்படுவார்கள்.

பயிற்சியாளர்கள் யார்

பயிற்சியாளர்கள் யார்

சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளெம்மிங், டெல்லிக்கு தென் ஆப்பிரிக்க கிறிஸ்டன், பஞ்சாப்புக்கு சஞ்சய் பங்கர், கொல்கத்தாவுக்கு ஆஸ்திரேலியாவியின் டிரிவோர் பேலிஸ், மும்பை இந்தியன்ஸ்சுக்கு ரிக்கி பாண்டிங், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கு நியூசிலாந்தின் வெட்டோரி, ராஜஸ்தானுக்கு தென் ஆப்பிரிக்காவின் பேடி அப்டன், ஹைதராபாத்துக்கு ஆஸ்திரேலியாவின் டாம்மூடி ஆகியோர் பயிற்சியாளர்களாக செயல்படுவர்.

டிவிட்டர்

டிவிட்டர்

ஐபிஎல் போட்டிக்கான அதிகாரப்பூர்வ டிவிட்டர் அக்கவுண்ட் @IPL ஆகும். அதிகாரப்பூர்வ ஹேஸ்டேக் #PepsiIPL ஆகும். பெப்சி நிறுவனத்தையும் ஹேஸ்டேக்கில் ஐபிஎல் இணைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோடை காலத்தில், பெப்சியை எப்போதும் நினைவில் நிறுத்த இந்த முயற்சி நடந்துள்ளது.

Story first published: Tuesday, April 7, 2015, 12:04 [IST]
Other articles published on Apr 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+