Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுவராஜ் ஆகிட்டாரு ஃபிட்.. அடிச்சதெல்லாம் ஹிட்.. இதற்கெல்லாம் காரணம் யார் தெரியுமா?

ஹைதராபாத்: ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் நேற்று மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக உருமாறி வந்துள்ள யுவராஜ் சிங்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

வெறும் 27 பந்துகளில் 62 ரன்களை அவர் குவித்து மைதானத்தில் பல வான வேடிக்கைகளை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஹைதராபாத் அணி வெற்றிக்கு யுவராஜின் அந்த அதிரடிதான் முக்கியமாக கை கொடுத்தது.

ஆரம்பம் முதலே அடித்து ஆடுவதில்தான் கவனமாக இருந்தார் யூவி. பேட்டை மிக உயரத்தில் ஓங்கி சரியான நேரத்தில் பந்தை டச் செய்யும் இயல்பான அவரது பவர் ஹிட் ஷாட்டுகள் நன்கு கை வந்தது.

ஆணழகன்

ஆணழகன்

யுவராஜ் சிங் பார்ப்பதற்கும் மிகவும் ஃபிட்டாக இருந்தார். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று அணிக்கு திரும்பியபோது யுவராஜ்சிங் உடல் இயல்பான ஃபிட்னஸ்சை இழந்திருந்தது. தொப்பையுடன் அவர் காணப்பட்டார்.

பலே ஃபீல்டர்

பலே ஃபீல்டர்

யுவராஜ்சிங் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் மட்டுமின்றி, இந்தியாவின் ஜான்டி ரோட்ஸ் என அழைக்கப்படும் பெஸ்ட் ஃபீல்டருமாவார். ஜாகீர்கான் பந்தில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டனாக இருந்த ஸ்மித் அடித்த பந்ததை, பாயிண்ட் திசையில் நின்ற யுவராஜ் சிங் பறந்து பிடித்த காட்சி ஜான்டிக்கே சவால் விடுபவை.

தொப்பையும், தொந்தியுமாக

தொப்பையும், தொந்தியுமாக

இப்படிப்பட்ட யுவராஜ்சிங், ஃபிட்னஸ் குறைபாடு காரணமாக ஃபீல்டிங்கிலும் மந்த நிலைக்கு சென்றிருந்தார். கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இதுதான் நிலைமையாக இருந்தது. ஆனால், நேற்றோ அவர் ஃபிட்னசிலும் கெத்து காட்டினார். தொப்பை கரைந்து, யூத்தாக இருந்தார் யூவி. வேதாளம் அஜித்திலிருந்து விவேகம் அஜித் போல உடலை மாற்றிவிட்டார் என புகழ்கிறார்கள் நெட்டிசன்கள்.

மனைவி வந்த நேரம்

இந்த மாற்றத்திற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்.. அதையும் கெஸ் செய்துவிட்டனர் நெட்டிசன்கள். யுவராஜ்சிங்கிற்கு சில மாதங்கள் முன்புதான், திருமணமானது. அவரது மனைவி ஹசல் கீச் பாலிவுட் நடிகையாகும். அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் இடம்பெற்ற செய்.. ஏதாவது செய்.. என்ற பாடலில் ஆட்டம் போட்டவர். இவர் நேற்று மைதானத்திற்கு வந்து யுவராஜை உற்சாகப்படுத்தியபடி இருந்தார்.

பழைய பன்னீர்செல்வம்

மனைவின் வருகைக்கு பிறகு ஆடிய முதல் பெரிய போட்டியில் யுவராஜ்சிங் சாதனை செய்துள்ளதை பார்க்கும்போது இதற்கெல்லாம் காரணம் ஹசல் கீச்தான் என்று கூறி புகழ்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். எப்படியோ, சாம்பியன்ஸ் லீக் போட்டித்தொடரில் இந்திய அணிக்காக யுவராஜ் ஆடுவதற்கான நல்ல சகுனங்கள் தென்பட தொடங்கிவிட்டன.

Story first published: Thursday, April 6, 2017, 9:07 [IST]
Other articles published on Apr 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+