Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி அபாரம்- ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டியில் வாழ்வா? சாவா என்று களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று ஆட்டங்களில் 2-ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

அடுத்த இரு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டது. இத் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

நாக்பூரில் 6வது போட்டி

நாக்பூரில் 6வது போட்டி

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 6-வது ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது.

ஆஸி.. அபாரம்

ஆஸி.. அபாரம்

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 350 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக வாட்சன் 102 ரன்களும், பெய்லி 156 ரன்களும் எடுத்தனர்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

351 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இந்திய அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்திய அணி 49.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கான 351 ரன்களை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக சர்மா 79 ரன்களும், தவான் 100 ரன்களும் எடுத்தனர்.

கோஹ்லி அபாரம்

கோஹ்லி அபாரம்

விராத் கோஹ்லி 61 பந்துகளில் 115 ரன்களும் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

Story first published: Thursday, October 31, 2013, 10:37 [IST]
Other articles published on Oct 31, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+