நான் இருக்கேன் உங்களுக்கு..! பெங்களூரு அணிக்கு கோச்சாக இருக்க விருப்பம் தெரிவித்த முன்னாள் வீரர்
மும்பை:பெங்களூரு அணிக்கு பயிற்சியாளராக நான் வர தயாராக இருக்கிறேன் என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனிலாவது முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பெங்களூரு அணி, பிளே ஆப் சுற்றுக்கே தகுதிபெறாமல் வெளியேறியது. அதற்கான ரசிகர்களிடம் உருகி, உருகி பேசினார் கேப்டன் விராட் கோலி.
இதுவரை பெங்களூரு ஒருமுறை கூட ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றதில்லை. கடந்த சீசனிலும் ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழையவில்லை. இந்த முறையும் அதே கதைதான். படுமோசமாக தோற்று தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

பயிற்சியாளர் மாற்றம்
இந்த சீசனில் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தலைமை பயிற்சியாளர் அதிரடியாக மாற்றப்பட்டார். அதாவது, தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி நீக்கப்பட்டு, பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். ஆனாலும் பெங்களூரு அணியின் நிலைமை மாறவில்லை.

11 புள்ளிகளே எடுத்தது
சீசனின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோற்று போனது. அதற்கு பிறகு நடைபெற்ற 8 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவு தெரியவில்லை. ஆக மொத்தத்தில் 11 புள்ளிகளை பெங்களூரு அணி பெற்றது. ஒரேயொரு ஒரு வெற்றி பெற்றிருந்தால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கலாம்.

தயாரானார் கிப்ஸ்
அதுவும் கைகூடவில்லை. நடப்பு சீசனும் முடிந்துள்ள நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளராக ஆர்வமாக இருப்பதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார். பயிற்சியாளரை நியமிப்பதாக இருந்தால் நான் வரத்தயார் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் சாம்பியன்
ஐபிஎல் தொடரில் கிப்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் (இப்போது அதன் பெயர் சன்ரைசர்ஸ்) அணிக்காக விளையாடினார். அவர் அணியில் ஆடிய போது தான் 2009ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி வென்றது.


Click it and Unblock the Notifications