Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100 வது டெஸ்டில் சாதிப்பாரா புஜாரா? ஒரு இந்தியர் கூட செய்யல.. நல்ல வாய்ப்பை வீணடிக்காதீங்க

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் புஜாரா நாளை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நூறாவது போட்டியில் களமிறங்குகிறார்.

இந்த நிலையில் புஜாராவுக்கு ஒரு பெரிய சாதனை படைக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 12 இந்திய அணி வீரர்கள் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருக்கிறார்கள்.

இதில் ஒருவர் கூட நூறாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது கிடையாது. இந்த நிலையில் புஜாரா அந்த சாதனையை படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அதிகபட்ச ஸ்கோர்

அதிகபட்ச ஸ்கோர்

தற்போது நூறாவது டெஸ்டில் விளையாடிய இந்திய வீரர்கள் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வி வி எஸ் லட்சுமணன் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் 64 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ஸ்கோராக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 55 ரன்கள் அடித்திருக்கிறார்.

சச்சின் - டிராவிட்

சச்சின் - டிராவிட்

இது முந்தைய சாதனையாக கருதப்பட்டது. அதன் பிறகு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது 54 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவர் சதம் அடிப்பார் என கருதப்பட்ட நிலையில் 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதேபோன்று அனுபவ வீரரும் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தனது நூறாவது டெஸ்டில் விளையாடும்போது 52 ரன்கள் சேர்த்திருக்கிறார்.

ஹர்பஜன் - கோலி

ஹர்பஜன் - கோலி

இந்த பட்டியலில் யாருமே எதிர்பாராத வகையில் ஹர்பஜன் சிங் இடம் பெற்று இருக்கிறார். ஆல்ரவுண்டரான ஹர்பஜன்சிங் தனது நூறாவது டெஸ்டில் 52 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது நூறாவது டெஸ்டில் 48 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது நூறாவது டெஸ்டில் 45 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

முதலிடம் பிடிக்க வாய்ப்பு

முதலிடம் பிடிக்க வாய்ப்பு

இந்த பட்டியலில் நாளை புஜாரா முதலிடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

எனினும் புஜாரா சதம் அடித்தால் நூறாவது டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். டெல்லி ஆடுகளம் தோய்வாகவும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் புஜாரா தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ஸ்கோர் அடித்தாலே இந்த சாதனையை முறி அடிப்பதோடு இந்த பட்டியலில் முதலிடத்தையும் பிடிக்க முடியும்.

Story first published: Thursday, February 16, 2023, 14:07 [IST]
Other articles published on Feb 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+