Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

872 ரன்.. ஆஸ்திரேலியாவை கதற வைத்த தென்னாப்பிரிக்கா.. கிரிக்கெட் உலகமே ஆடிப்போன மேட்ச்

மும்பை : கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்க முடியாத சாதனை ஒன்றை ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் செய்தன. மார்ச் 12, 2006 ஆம் தேதி அன்று நடந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டது. இன்றளவிலும் ஆஸ்திரேலிய அணியால் ஜீரணிக்கவே முடியாத ஒரு தோல்வியை தென்னாப்பிரிக்கா அளித்து இருந்தது.

அந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் இரண்டு அணிகளும் 2 - 2 என்ற சமநிலையில் இருந்தன. வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற வெறியில் இருந்தது ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.

Highest match aggregate in ODI History was hold by South Africa vs Australia held on 12 march 2006

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆடம் கில்கிறிஸ்ட் - சைமன் காட்டிச் துவக்கம் அளித்தனர். கில்கிறிஸ்ட் 44 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். காட்டிச் 90 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். ரிக்கி பாண்டிங் வெற்றி தேவை என்ற வெறியில் அதிரடி ஆட்டம் ஆடினார். 13 ஃபோர், 9 சிக்ஸ் அடித்த அவர் 105 பந்துகளில் 164 ரன்கள் குவித்தார். மைக் ஹஸ்ஸி 51 பந்துகளில் 81 ரன்களும், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 13 பந்துகளில் 27 ரன்களும் குவிக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 434 ரன்கள் சேர்த்தது.

அன்றைய தேதியில் ஒரு அணி கூட ஒருநாள் போட்டியில் 400 ரன்களை தாண்டியதில்லை. ஆனால், ஆஸ்திரேலியா 434 ரன்கள் வரை சேர்த்து கிரிக்கெட் உலகையே மிரள வைத்தது. தென்னாப்பிரிக்கா கதை முடிந்தது என அனைவரும் நினைத்த நிலையில் அடுத்த மூன்றரை மணி நேரம் கிரிக்கெட் ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாத காட்சிகள் அரங்கேறின.

தென்னாப்பிரிக்க அணி இந்த இமாலய இலக்கை சேஸ் செய்ய முடிவு செய்தது. கேப்டன் கிரேம் ஸ்மித் துவக்க வீரராக 55 பந்துகளில் 90 ரன்கள் குவிக்க, மூன்றாம் வரிசையில் இறங்கிய கிப்ஸ் 111 பந்துகளில் 175 ரன்கள் சேர்த்தார். இவர்களை தவிர மார்க் பவுச்சர் மட்டுமே கடைசி வரை நின்று 50 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கொண்டே செல்ல 8 விக்கெட்கள் இழந்த நிலையில் கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது தென்னாப்பிரிக்கா.

கடைசி ஓவரை பிரெட் லீ வீசினார். முதல் இரண்டு பந்துகளில் 5 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா. மூன்றாவது பந்தில் 9வது விக்கெட்டை இழந்த போதும் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. ஆஸ்திரேலிய அணி பெரும் அதிர்ச்சி அடைந்தது. அந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 872 ரன்கள் குவித்தன. 2006ஆம் ஆண்டு செய்யப்பட்ட அந்த சாதனையை இன்று வரை வேறு எந்த போட்டியாலும் முந்த முடியவில்லை.

Story first published: Tuesday, March 12, 2024, 12:14 [IST]
Other articles published on Mar 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+