Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து சாதனை ஓகே.. இந்திய அணியும் குறைஞ்சது கிடையாதுங்க.. எப்படி சிதைச்சிருக்கோம் பாருங்கள்!

லண்டன்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியின் முடிவில், இங்கிலாந்து அணி 2-0 என ஏற்கனவே முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம், டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்கத்திலிருந்தே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி வீரர்கள் ரன் மழை பொழிந்தனர்.

Highest totals in one-day international cricket

இங்கிலாந்து வீரர்களின் அதிரடி ஆட்டத்தை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் கதிகலங்கினர். அந்த அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 122 பந்துகளில் 171 ரன்களை குவித்து அசரவைத்தார். மேலும் ஜோ ரூட் 85 ரன்களும், ஜோஸ் பட்லர் 90 ரன்களும் எடுத்து அணிக்கு பலமான ரன்களை சேர்க்க துவங்கினர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 444 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் இலங்கை அணி, 2006ல் நெதர்லாந்து எதிராக 443 ரன்கள் எடுத்திருந்ததே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்களாக இருந்து வந்தது. தற்போது இங்கிலாந்து அந்த சாதனையை முறியடித்துள்ளது.

அதிக ரன்களை குவித்த முந்தைய சாதனைகள் குறித்து ஒரு பார்வை:

443-9 - இலங்கை (நெதர்லாந்துக்கு எதிராக), 4 ஜூலை 2006.

439-2 - தென் ஆப்பிரிக்கா (மே.இ.தீவுகளுக்கு எதிராக), 18 ஜனவரி 2015

438-9 - தென் ஆப்பிரிக்கா (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), 12 மார்ச் 2006

438-4 - தென் ஆப்பிரிக்கா (இந்தியாவுக்கு எதிராக), 25 அக்டோபர் 2015

434-4 - ஆஸ்திரேலியா (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக), 12 மார்ச் 2006

418-5 - இந்தியா (மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக), 8 டிசம்பர் 2011

418-5 - தென் ஆப்பிரிக்கா (ஜிம்பாப்வேக்கு எதிராக), 20 செப்டம்பர் 2006

417-6 - ஆஸ்திரேலியா (ஆப்கானிஸ்தான்), 4 மார்ச் 2015

414-7 - இந்தியா (இலங்கைக்கு எதிராக), 15 டிசம்பர் 2009

413-5 - இந்தியா (பெர்முடா அணிக்கு எதிராக), 2007

411-8 - இலங்கை (இந்தியாவுக்கு எதிராக-இலங்கை தோற்றது), 2009

411-4 - தென் ஆப்பிரிக்கா (அயர்லாந்துக்கு எதிராக), 2015

408-5 - தென் ஆப்பிரிக்கா (மே.இ.தீவுகளுக்கு எதிராக), 2015

408-9 இங்கிலாந்து (நியூசிலாந்துக்கு எதிராக), 2015

404-5 இந்தியா (இலங்கைக்கு எதிராக), 2014.

404-2 நியூசிலாந்து (அயர்லாந்துக்கு எதிராக) 2008

401-3 இந்தியா (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக), 2010

Story first published: Wednesday, August 31, 2016, 12:32 [IST]
Other articles published on Aug 31, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+