Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷாந்த்தின் 'அருமையான' பந்து வீச்சால் வீழ்ந்த இந்தியா!

மொஹாலி: இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது.. எனவே அடுத்தடுத்த போட்டிகளில் இதை எப்படி டோணி சமாளிக்கப் போகிறாரோ என்று அத்தனை பேரும் அச்சப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மொஹாலியில் நேற்று நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் நமது பந்து வீச்சே நமக்கு எதிரியாக மாறி தோல்வியைத் தேடித் தந்து விட்டது.

வெற்றியைக் கிட்டத்தட்ட நாம் நெருங்கி விட்டோம் என்று அத்தனை பேரும் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் 48வது ஓவரில் அத்தனையையும் தவிடு பொடியாக்கி விட்டது இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு.

ஒரே ஓவரில் அவர் வாரிக் கொடுத்த 30 ரன்கள்தான் இந்தியாவின் வெற்றியை ஆஸ்திரேலியா பக்கம் கொண்டு போய் விட்டது.

பயமுறுத்திய பால்க்னர்

பயமுறுத்திய பால்க்னர்

ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பால்க்னரின் அபார ஆட்டம்தான் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித் தந்தது.

29 பந்துகளில் 64

29 பந்துகளில் 64

29 பந்துகளைச் சந்தித்த பால்க்னர் 64 ரன்களை விளாசி அணியை கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்குக் கொண்டு சென்றார்.

47 வது ஓவர் வரை

47 வது ஓவர் வரை

47 வது ஓவர் வரை இந்தியாவுக்குப் பக்கத்தில்தான் வெற்றி இருந்தது. ஆனால் தோல்வியின் பிடியிலிருந்து ஆஸ்திரேலியாவை மீட்டுச் சென்றார் பால்க்னர்.

ஒரே ஓவரில் 30 ரன்கள்

ஒரே ஓவரில் 30 ரன்கள்

ஆனால் 48வது ஓவரில் பால்க்னர் போட்ட ரன்னாட்டம், ஆஸ்திரேலியர்களை பெரும் நிம்மதிக்கு இட்டுச் சென்றது. பிரமாதமாக ஆடிய பால்க்னர் இந்த ஒரே ஓவரில் 30 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிப்படுத்தி விட்டார்.

இஷாந்த் சர்மாவின் மோசமான பந்து வீச்சு

இஷாந்த் சர்மாவின் மோசமான பந்து வீச்சு

இந்த ஓவரைப் போட்டவர் இஷாந்த் சர்மா. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் சரியாக பந்து வீசாத இஷாந்த், இந்தப் போட்டியிலும் மிகப் பெரிய அளவில் சொதப்பி விட்டார். இவர் கொடுத்த 30 ரன்கள்தான் இந்தியாவிடமிருந்து வெற்றியைப் பறித்து விட்டது.

அபாரமான வெற்றி

அபாரமான வெற்றி

இறுதியில், 3 பந்துகள் மீதம் வைத்து வெற்றிக்குத் தேவையான 304 ரன்களை 6 விக்கெட்களை மட்டும் இழந்து பெற்றது ஆஸ்திரேலியா.

5 சிக்ஸர்களை விளாசிய பால்க்னர்

5 சிக்ஸர்களை விளாசிய பால்க்னர்

நேற்றைய ஆட்டத்தில் பால்க்னர் 5 சிஸ்கர்களை விளாசினார். 48வது ஓவரில் பால்க்னர் 4, 6, 6, 2, 6, 6 என்ற கணக்கில் ரன்களைக் குவித்தார்.

வெற்றியைத் தோல்வியாக்கிய இஷாந்த்

வெற்றியைத் தோல்வியாக்கிய இஷாந்த்

47வது ஓவர் முடிவின்போது 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா இருந்தது. ஆனால் இதை அப்படியே மாற்றிப் போட்டு விட்டது இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு. அதாவது 12 பந்துகளில் 14 ரன்கள் என்ற எளிதான நிலைக்கு ஆஸ்திரேலியாவிடம் இந்தியாவின் வெற்றியைத் தாரை வார்த்து விட்டார் அவர்.

முதல் முறை

முதல் முறை

இந்தியாவில், இந்தியாவை 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து ஆஸ்திரேலியா வீழ்த்துவது இதுவே முதல் முறை என்பதால் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த வெற்றி சிறப்பானது.

2-1 என்ற முன்னிலை

2-1 என்ற முன்னிலை

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

டோணியின் அபார சதம் வீணானது

டோணியின் அபார சதம் வீணானது

முன்னதாக இந்தியா பேட் செய்தபோது கேப்டன் டோணி அடித்த அபாரமான சதம், வீணாகிப் போனது. டோணி 121 பந்துகளைச் சந்தித்து 139 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

9வது சதம்

9வது சதம்

டோணிக்கு இது 9வது ஒரு நாள் போட்டி சதமாகும்.

2012க்குப் பிறகு இதுதான் முதல்

2012க்குப் பிறகு இதுதான் முதல்

மேலும் 2012ம் ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானுக்கு அவர் சதம் போட்டதற்குப் பிறகு சதமே அடிக்காமல் இருந்தார். நேற்றுதான் முதல் முறையாக அவர் சதம் விளாசினார்.

5 சிக்ஸ்.. 12 போர்

5 சிக்ஸ்.. 12 போர்

நேற்றைய தனது இன்னிங்ஸில் டோணி 5 சிக்ஸர்களையும், 12 பவுண்டரிகளையும் விளாசினார்.

கேப்டனாக 5000 ரன்கள் குவிப்பு

கேப்டனாக 5000 ரன்கள் குவிப்பு

நேற்றைய போட்டியின் மூலம் கேப்டனாக 5000 ரன்களைக் கடந்தார் டோணி. அஸாருதீன், கங்குலிக்குப் பிறகு 5000 ரன்களைக் கடந்த இந்திய கேப்டன் டோணிதான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரிய ஸ்கோர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரிய ஸ்கோர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கேப்டன் எடுத்த அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரும் கூட இதுதான். இதற்கு முன்பு 2009ம் ஆண்டு நாக்பூரில் நடந்த போட்டியில் 124 ரன்களை டோணிதான் எடுத்திருந்தார். நேற்று தனது சாதனையை தானே முறியடித்தார்.

41வது ஓவரில்தான் சிக்ஸ்

41வது ஓவரில்தான் சிக்ஸ்

நேற்றைய போட்டியில் இந்தியா தனது முதல் சிக்ஸரை 41வது ஓவரில்தான் விளாசியது. அதுவும் கூட டோணிதான் அடித்தார்.

கோஹ்லி ஓகே.

கோஹ்லி ஓகே.

நேற்றைய போட்டியில் விராத் கோஹ்லி அரை சதம் போட்டார். இது அவர் போடும் 4வது தொடர்ச்சியான அரை சதமாகும்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

தொடர்ந்து கோஹ்லி சிறப்பாக ஆடி வருகிறார். முதல் போட்டியில் 61 ரன்களை எடுத்த அவர் 2வது போட்டியில் 100 போட்டார். நேற்று 68 ரன்களைக் குவித்தார்.

Story first published: Sunday, October 20, 2013, 11:16 [IST]
Other articles published on Oct 20, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+