Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6வது ஒருநாள் போட்டியில் 4 சதங்கள் அடித்து சாதனை

நாக்பூர்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நேற்றைய ஒருநாள் போட்டியில் 4 சதங்கள் அடித்து சாதனை படைக்கப்பட்டது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 6வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய நிலையில் இந்திய அணி களமிறங்கி வெற்றியும் பெற்றது.

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் பெய்லி, இந்தியாவின் கோஹ்லி உள்ளிட்ட 4 வீரர்கள் சதமடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்தப் போட்டியின் முக்கிய அம்சங்கள் சில.

எத்தனை பவுண்டரிகள்?

எத்தனை பவுண்டரிகள்?

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா 39 பவுண்டரிகளையும் இந்தியா 40 பவுண்டரிகளையும் விளாசியது.

13 சிக்சர்கள்

13 சிக்சர்கள்

ஆஸ்திரேலியா அணி 9 சிக்சர்களையும் இந்தியா 4 சிக்சர்களையும் விளாசியது.

156 ரன்கள் குவித்த பெய்லி

156 ரன்கள் குவித்த பெய்லி

ஆஸ்திரேலியாவின் கேப்டன் பெய்லி 156 ரன்களை குவித்தார். இந்தியாவின் கோஹ்லி 115 ரன்களைக் குவித்தார்.

விக்கெட்டுகள்

விக்கெட்டுகள்

இந்திய அணியின் அஸ்வின் 64 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 68 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சன் 72 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

3வது சேஸிங் வெற்றி

3வது சேஸிங் வெற்றி

இந்திய அணி கடைசி ஓவரில் 3 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கான 351 ரன்களை எட்டியது. இமாலய ஸ்கோரை இந்தியா இப்படி சேஸிங் செய்து வெற்றி பெறுவது 3வது முறை.

61 பந்தில் சதமடித்த கோஹ்லி

61 பந்தில் சதமடித்த கோஹ்லி

இந்தியாவின் கோஹ்லி 61 பந்துகளில் சதத்தை எட்டினார். இந்திய வீரர்களில் அதிவேக சதமடித்த 3வது வீரர் கோஹ்லி. கோஹ்லில் நடப்பாண்டில் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார்.

சதமடித்த தவான்

சதமடித்த தவான்

ஷிகார் தவான் நடப்பாண்டில் தமது 4வது சத்தை நிறைவு செய்துள்ளார். அத்துடன் நடப்பாண்டியில் ஆயிரம் ரன்களையும் எட்டியுள்ளார்.

ஒரே நாளில் 4 சதங்கள்

ஒரே நாளில் 4 சதங்கள்

நேற்றைய போட்டியில் 4 சதங்கள் அடிக்கப்பட்டன. இதற்கு முன்பு லாகூரில் 1998-ல் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் இப்படி 4 சதங்கள் அடிக்கப்பட்டன.

ஆஸிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்த டோணி

ஆஸிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்த டோணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆயிரம் ரன்களை நேற்று கேப்டன் டோணி எட்டினார்.

1500 ரன்களை எட்டிய பெய்லி

1500 ரன்களை எட்டிய பெய்லி

ஆஸ்திரேலியா கேப்டன் பெய்லி 34வது ஒருநாள் போட்டியில் 1500 ரன்களை எட்டினார்.

வாட்சன் சதம்

வாட்சன் சதம்

ஆஸ்திரேலியாவின் வாட்சன் 94 பந்துகளில் 102 ரன்களை எட்டினார். இதில் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடக்கம்.

Story first published: Sunday, November 3, 2013, 17:32 [IST]
Other articles published on Nov 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+