Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி 'முட்டை' போட்டும் பெங்களூர் ஜெயிச்சுருச்சே..!!

பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கடைசி நேரத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.

இத்தனைக்கும் கேப்டன் கோஹ்லி முதல் முன்னணி வீரர்கள் அத்தனை பேரும் பேட்டிங்கில் சொதப்பினர். ஆனால் ஆப் டிவில்லியர்ஸ் மட்டும் ஒத்தை ஆளாக தனித்துப் போராடி வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

அபாரமாக ஆடிய அவர் 41 பந்துகளில் 89 ரன்களைக் குவித்து பெங்களூர் வெற்றி பெற உதவினார்.

சன் ரைசர்ஸுடன் மோதல்

சன் ரைசர்ஸுடன் மோதல்

நேற்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் பெங்களூர் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

சீராக ஆடிய ஹைதராபாத்

சீராக ஆடிய ஹைதராபாத்

இதில் முதலில் சன்ரைசர்ஸ் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களைக் குவித்தது.

பலே வார்னர்

பலே வார்னர்

ஹைதராபாத் அணியின் வார்னர் அதிரடியாக ஆடினார். நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 3வது அரை சதத்தையும் பூர்த்தி செய்தார். 49 பந்துகளைச் சந்தித்த அவர் 61 ரன்களைக் குவித்தார்.

ஸ்டார்க் - ஆரோன் தலைக்கு 2

ஸ்டார்க் - ஆரோன் தலைக்கு 2

பெங்களூர் அணியின் மிட்சல் ஸ்டார்க் மற்றும் வருண் ஆரோன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர்.

சொதப்பல் சேஸிங்

சொதப்பல் சேஸிங்

அதன் பிறகு சேஸிங்கைத் தொடங்கிய பெங்களூர் அணி என்னமோ ஏதோவென்று ஆடியது. முன்னணி வீரர்கள் படபடவென்று அவுட்டாகினர்.

கெய்ல் மட்டும்

கெய்ல் மட்டும்

தொடக்க வீரராக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் மட்டும் சற்று சுதாரிப்பாக ஆடினார். 19 பந்துகளைச் சந்தித்த அவர் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

கோஹ்லி முட்டை

கோஹ்லி முட்டை

கேப்டன் கோஹ்லி 5 பந்துகளைச் சந்தித்து ரன் எடுக்காமல் அவுட்டானார். பார்த்திவ் படேல் 3 ரன்களுடனும், ரூஸோ 14 ரன்களுடனும் வெளியேற பரிதவிப்புக்குள்ளானது பெங்களூர்.

ஆபத்பாந்தவன் வில்லியர்ஸ்

ஆபத்பாந்தவன் வில்லியர்ஸ்

ஆனால் ஆப் டி வில்லியர்ஸ் ஆபத்பாந்தனவாக மாறினார். ஹைதராபாத் பந்து வீச்சை நொறுக்கிய அவர் அபார ரன் குவிப்பில் குதித்தார். மறுபக்கம் விக்கெட்கள் விழுந்தபடி இருந்தாலும் வில்லியர்ஸ் சிறப்பாக ஆடினார்.

41 பந்துகளில் 89 ரன்கள்

41 பந்துகளில் 89 ரன்கள்

41 பந்துகளைச் சந்தித்த அவர் 89 ரன்களைக் குவித்தார். குறிப்பாக டேல் ஸ்டெய்ன் பந்து வீச்சை காலி செய்தார். 8 சிக்ஸர்களை விளாசினார். 6 பவுண்டரிகளைத் துரத்தினார்.

ஏமாற்றிய யுவராஜ் சிங்

ஏமாற்றிய யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்கை எதற்காக இத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வாங்கினோம் என்று நேற்று இரவு தூங்கப் போவதற்கு முன்பு விஜய் மல்லையா நிச்சயம் விசனப்பட்டிருப்பார். காரணம் நேற்றும் யுவராஜ் ஜொலிக்கவில்லை. 14 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார்.

கடைசிப் பந்துக்கு முதல் பந்தில்..வெற்றி

கடைசிப் பந்துக்கு முதல் பந்தில்..வெற்றி

இழுபறியுடன் ஆடி வந்த பெங்களூர் அணி 19.5 வது ஓவரில்தான் வெற்றியைத் தொட்டது. தப்பிப் பிழைத்தது.

ஸ்டெய்னைப் பார்த்த வில்லியர்ஸ்

ஸ்டெய்னைப் பார்த்த வில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆப் டிவில்லியர்ஸ், சக நாட்டுக்காராரன அதி வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னை நேற்று 19வது ஓவரில் பதம் பார்த்து விட்டார். அடித்து நொறுக்கிய வில்லியர்ஸ், அந்த ஓவரில் 24 ரன்களைக் குவித்து ஸ்டெய்னை நொந்து போக வைத்து விட்டார். அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் அவர் விளாசினார்.

சிக்ஸ் மழை..

சிக்ஸ் மழை..

நேற்றைய போட்டி முழுவதும் சிக்ஸர்கள் சரமாரியாக பறந்தன. பெங்களூர் அணி 11 சிக்ஸர்களையும், ஹைதராபா3த் 6 சிக்ஸர்களையும் பறக்க விட்டன. பவுண்டரிகளைப் பொறுத்தவரை ஹைதராபாத் 12ம், பெங்களூர் 11ம் எடுத்தன.

ஆட்ட நாயகன் வில்லியர்ஸ்

ஆட்ட நாயகன் வில்லியர்ஸ்

சிங்கிள் சிங்கமாக பெங்களூரை கரை சேர்த்த வில்லியர்ஸே நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் ஆவார்.

போட்டிக்கு முதல் நாள் செம பார்ட்டி

போட்டிக்கு முதல் நாள் செம பார்ட்டி

இந்தப் போட்டிக்கு முதல் நாள் இரவு விடிய விடிய பெங்களூர் வீரர்கள் ஆடல் பாடலுடன் பார்ட்டியில் அமர்க்களப்படுத்தினராம். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இதனால் இவர்கள் எங்கே இன்று ஆடப் போகிறார்கள் என்று ரசிகர்கள் டென்ஷனாக இருந்தனர்.

ஆனால், பரவாயில்லை, கோஹ்லி முட்டை போட்டும், கெய்ல் பெயிலான நிலையிலும் கூட பெங்களூர் தப்பிப் பிழைத்ததால் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Story first published: Monday, May 5, 2014, 11:13 [IST]
Other articles published on May 5, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+