Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேக்ஸ்வெல்லைச் சாச்சுப்புட்டாங்களே... ஆனால் மில்லர் 'பில்லர்' போல நின்றதால் வென்றது பஞ்சாப்

பெங்களூர்: அபாயகரமான கிளன் மேக்ஸ்வெல்லை நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர்கள் அதி சூப்பராக சீக்கிரமே அவுட் செய்து விட்டபோதிலும் கூட டேவிட் மில்லர் தூண் போல நின்று பஞ்சாபுக்கு உயர்வைக் கொடுத்து விட்டார். இதனால் பெரியஸ்கோரை எட்டிய பஞ்சாப் அணி பின்னர் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் பெங்களூரை தோற்கடித்து விட்டது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆதிக்கம் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்கிறது. குறிப்பாக அவர்களது பந்து வீச்சும், பேட்டிங்கும் தொடர்ந்து பட்டையைக் கிளப்புகிறது.

நேற்று அந்த அணி பெங்களூர் அணியை தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சின் காரணமாக 32 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது பஞ்சாப் அணிக்கு 7வது வெற்றியாகும். இதுவரை அந்த அணி ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது.

எப்படிப் போட்டாலும் அடிக்கிறாங்களே

எப்படிப் போட்டாலும் அடிக்கிறாங்களே

கிங்ஸ் லெவன் பஞ்சாபில் நேற்று ஷேவாக் கலக்கினார். வழக்கமான ஆட்டத்தை அவர் காட்டி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். அதேபோல பின்னால் வந்தவர்களும் சற்றும் குறைவில்லாமல் ஆடியதால் விக்கெட்கள் அவ்வப்போது விழுந்தாலும் கூட ரன் வேகம் குறையவில்லை.

விறுவிறு ஷேவாக்

விறுவிறு ஷேவாக்

கண்ணாடி போட்டு ஆடினாலும் கில்லாடியாக ஆடினார் ஷேவாக். 24 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார். அதேபோல மந்தீப் சிங் 15 பந்துகளில் 21 ரன்களைச் சேர்த்தார்.

11 பந்துதான்.. பட்டையைக் கிளப்பிய மேக்ஸ்வெல்

11 பந்துதான்.. பட்டையைக் கிளப்பிய மேக்ஸ்வெல்

அடுத்து மேக்ஸ்வெல்.. இவர் என்ன பாடுபடுத்தப் போகிறாரோ என்று நினைக்க ஆரம்பிப்பதற்குள்ளாகவே வெளுக்க ஆரம்பித்து விட்டார்.. சரித்தான் .. என்று பெங்களூர் வீரர்கள் டென்ஷனாக ஆரம்பித்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 11 பந்துகளில் வீழ்ந்து விட்டார் மேக்ஸ்வெல். இருப்பினும் அதற்குள் அவர் 25 ரன்களைக் குவித்து வி்ட்டார். இதில் 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடக்கம்.

பின்னி எடுத்த மில்லர்

பின்னி எடுத்த மில்லர்

ஆனால் அவர் பார்க்க வேண்டிய வேலையை மில்லர் பார்த்து விட்டார். அதிரடியாக ஆடிய அவர் 29 பந்துகளில் 66 ரன்களைக் குவித்து பெங்களூரைப் பதம் பார்த்தார். அதிலும் அவர் அடித்த ஒரு சிக்ஸ் 100 மீட்டர் உயரத்தையும் தாண்டிப் போய் அதிர வைத்தது.

200ஐத் தாண்ட வேண்டியது

200ஐத் தாண்ட வேண்டியது

பஞ்சாப் அணி அடித்த வேகத்திற்கு அது 200 ரன்களைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில் சில விக்கெட்கள் தேவையில்லாமல் விழுந்ததால் 198 ரன்களில் நிறுத்தப்பட்டது அந்த அணி.

டிவில்லியர்ஸ் பதிலடி

டிவில்லியர்ஸ் பதிலடி

பின்னர் விளையாட வந்த பெங்களூருக்கு பார்த்திவ் படேல் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தொடக்கத்தைக் கொடுத்தார். ஆனால் மறுபக்கம் விக்கெட்கள் சரிந்தவண்ணம் இருந்தன. கோஹ்லி, கெய்ல், சச்சின் ராணா, யுவராஜ் சிங் ஆகியோர் ஏமாற்றம் தந்தனர். ஆனால் டிவில்லியர்ஸ் பின்னி எடுத்தார்.

26 பந்துகளில் 53

26 பந்துகளில் 53

ஆப் டிவில்லியர்ஸ், பஞ்சாப் பந்து வீச்சைப் பதம் பார்த்து 26 பந்துகளில் 53 ரன்களைக் குவித்தார். ஆனால் அது பலன் தரவில்லை. விக்கெட்கள் தொடர்ந்து சரிந்து கடைசியில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. கடைசி நேரத்தில் மிட்சல் ஸ்டார்க் 23 பந்துகளில் 29 ரன்களைக் குவித்தும் பலன் கிடைக்கவில்லை.

3வது முறையாக முட்டை போட்ட கோஹ்லி

3வது முறையாக முட்டை போட்ட கோஹ்லி

பெங்களூர் கேப்டன் விராத் கோஹ்லி இந்த தொடரில் 3வது முறையாக நேற்று டக் அவுட் ஆனார்.

சந்தீப் சர்மா ஆட்ட நாயகன்

சந்தீப் சர்மா ஆட்ட நாயகன்

பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா 3 விக்கெட்களைச் சாய்த்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

Story first published: Saturday, May 10, 2014, 12:33 [IST]
Other articles published on May 10, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+