Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2015: கொல்கத்தா- மும்பை போட்டியி்ல் கவனிக்க வேண்டிய ஹைலைட்சுகள்

கொல்கத்தா: 8வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும், மும்பை அணிகள் இடையேயான மோதலில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

இந்த போட்டி பற்றிய சில ஹைலைட்ஸ்:

கொல்கத்தா தொடர்ச்சியாக பெற்ற பத்தாவது வெற்றி இதுவாகும்.

போட்டியில் அதிகபட்சமாக விளாசப்பட்ட தனி நபர் ஸ்கோர் 98. மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா இந்த ஸ்கோரை அடித்தார்.

கொல்கத்தாவின் மோர்னே மோர்க்கல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியில், அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக மிளிர்ந்தார்.

Highlights, Stats: IPL 2015 Match 1: KKR Vs MI at Eden Gardens

கொல்கத்தாவின் சூர்யகுமார், அதிகபட்சமாக 5 சிக்சர்கள் விளாசினார்.

ஆட்ட நாயகன், விருதை மோர்க்கல் தட்டிச் சென்றார். அவர் 4 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டனுடன் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மொத்தம் 18 சிக்சர்கள் போட்டியில் விளாசப்பட்டன. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் 7 சிக்சர்களும், கேகேஆர் தரப்பில் 11 சிக்சர்களும் அதில் அடங்கும்.

மொத்தம் 29 பவுண்டரிகள் விளாசப்பட்டன. மும்பை 18ம், கேகேஆர் 11ம் விளாசின.

போட்டியில், சிக்கன பவுலர் மோர்க்கல் என்றால், வாரி வழங்கிய பவுலர் ஜஸ்ப்ரித் பும்ராவாகும். 3 ஓவர்கில் 38 ரன்கள் கொடுத்த அவருக்கு ஆறுதலாக ஒரு விக்கெட் கிடைத்தது.

ஒரு பேட்ஸ்மேன் மட்டும் டக் அவுட் ஆனார். மும்பை இந்தியன்ஸ் அணியின் அம்பத்தி ராயுடுதான் அந்த பேட்ஸ்மேன்.

ரோகித்-கோரி ஆன்டர்சன் இடையேயான 131 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் பெஸ்ட் பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது.

மும்பை பேட் செய்தபோது உமேஷ் யாதவ் வீசிய 15வது ஓவரில் அதிகபட்சமாக 21 ரன்கள் விளாசப்பட்டன.

மும்பை கேப்டன் ரோகித் 98, கொல்கத்தா கேப்டன் கம்பீர் 57 ரன்கள் எடுத்திருந்தனர். இரு கேப்டன்களின் பங்களிப்பு மட்டும் 155 ரன்களாகும்.

ஐபிஎல் வரலாற்றில் இரு எதிர் அணி கேப்டன்கள் சேர்ந்து குவித்த அதிக ரன்னும் இதுவாகும்.

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் வீசிய கொல்கத்தா இன்னிங்சின் 2வது ஓவரில் கம்பீரின் பேட் உடைந்து விழுந்தது.

Story first published: Thursday, April 9, 2015, 11:45 [IST]
Other articles published on Apr 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+