இங்க ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் இருந்ததே எங்க? லண்டன் லார்ட்ஸ் மைதானமா இது? ரசிகர்கள் ஷாக்
லண்டன் : இஸ்லாமியர்களுக்கு மெக்கா எப்டி ஒரு புனித தளமோ, அதே போல் கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கிய மைதானம் என்றால் அது லண்டன் லார்ட்ஸ் மைதானம தான்.
மெக்காவிலிருந்து இஸ்லாம் மதம் தோன்றியது. அதே போல் கிரிக்கெட்டின் அடி நாதம் என்றால் அது லார்ட்ஸ் மைதானம் தான். இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தை மெக்காஹ் ஆப் தி கிரிக்கெட் என்று அழைப்பார்கள்.
லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு முறையாவது டெஸ்ட் போட்டியில விளையாட மாட்டோமா என்பது தான் பல கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருக்கும்.

பாரம்பரிய மைதானம்
லார்ட்ஸ் மைதானத்தில் எந்த கிரிக்கெட் போட்டி நடந்தாலும் சரி, அதற்கு எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியை பார்க்கவில்லை என்றால், இங்கிலாந்து பெரியவர்களுக்கு அந்த ஆண்டே சரியாக ஓடாது. இங்கிலாந்தில் முதல் முறையாக இங்கு தான் கிரிக்கெட் ஆடப்பட்டதாக வரலாறு கூறுவதும் உண்டு.

கிரிக்கெட்டின் மெக்கா
லார்ட்ஸ் மைதானம் ஒன்றும் மெலபோர்டன கிரிக்கெட் மைதானம் போல் அதிக பார்வையாளர்களை கொண்ட மைதானம் அல்ல. 30 அயிரம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய வசதி மட்டும் தான இருக்கிறது ஆனால் லார்ட்ஸ் மைதானம் பாரமபரியத்திற்கு பெயர் போனது. பல உலககோப்பை இறுதிப் போட்டிகள் இங்க தான் நடைபெற்று இருக்கிறது.

வரலாற்று இடம்
கபில்தேவ் சாதனை படைத்ததும் இங்கு தான். டிராவிட், கஙகுலி டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதும் இங்கே தான். லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தால் அது வரலாற்றில் தனி இடம் பிடிக்கும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் சதம் அடித்தாலோ, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலோ, உங்களுடைய பெயர் இங்குள்ள பாரம்பரிய பலகையில் எழுதப்படும். லார்ட்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாக்ஸ்யை டிவியில் பார்க்கவே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்.

பனியால் மூடப்பட்டது
இந்த நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தின் தோற்றம் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான உணர்வை தந்துள்ளது. இங்கிலாந்தில் தற்போது குளிர் காலம் நிலவுவால் லார்ட்ஸ் மைதானம் , பனியால் மூடப்பட்டுள்ளது. இங்கு கிரிக்கெட் விளையாடப்பட்டதற்கான அறிகுறியே தெரியாத அளவு மைதானம் மூடப்பட்டு இருக்கிறது. இதனை பார்த்து பலரும் இது கிரிக்கெட் மைதானமா இல்லை ஐஸ் ஹ்க்கி மைதானமா என்று பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications