Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs WI 2nd test- தொடரை வெல்லுமா இந்தியா? 500வது போட்டியில் சாதிப்பாரா கோலி.. பவுலிங்கில் மாற்றம்

போர்ட் ஆப் ஸ்பெயின் : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இரண்டு விஷயங்களுக்காக வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறது.

முதல் காரணம் இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி பங்கேற்கும் 500 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டி இது ஆகும். மற்றொரு காரணம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் நூறாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

Historical test for tomorrow as Ind vs WI locks horns in Port of spain

இதுவரை 99 போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 முறையும், இந்திய அணி 23 முறையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 46 போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கிறது. இதில் கடைசியாக 21 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருமுறை கூட இந்தியாவை டெஸ்டில் வீழ்த்தியது கிடையாது.

இந்த 21 ஆண்டுகளில் இந்தியா 15 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. போர்ட் ஆப் ஸ்பைன் நகரில் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் நடைபெறவில்லை. இந்த ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்களுடன் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக நாளைய ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் பதிலாக முகேஷ் ஷர்மாவை களம் இறக்க கூடும் என தகவல் வெளியாகியது.

Historical test for tomorrow as Ind vs WI locks horns in Port of spain

எனினும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அதே அணி தான் இரண்டாவது டெஸ்டிலும் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி, குயின் பார்க் ஓவல் மைதானத்தில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றால் வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் இந்தியா வென்ற மைதானமாக மெல்போர்ன் உடன் இதுவும் சேரும்.

மெல்போர்ன் மைதானத்தில் அதிகபட்சமாக இந்தியா நான்கு வெற்றிகள் டெஸ்டில் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ஆஸ்திரேலியாவும் தான் 100 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்கள். தற்போது இரண்டாவது அணிகளாக வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவும் இடம் பெற இருக்கின்றன.

Story first published: Thursday, July 20, 2023, 0:00 [IST]
Other articles published on Jul 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+