Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆட்டத்தையே மாற்றிய அந்த 2 பந்து..விராட் கோலியின் வாழ்நாள் சிறந்த ஆட்டம்..பாக்.கை வீழ்த்தியது இந்தியா

மெல்போர்ன் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தோல்வி உறுதி என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஜோடி வெற்றியை தேடி தந்தது.

இதன் மூலம் கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி தந்தது. டாஸ் வென்ற ரோகித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கோல்டன் டக்

கோல்டன் டக்

இதனை அடுத்து தொடக்க வீரர்களாக பாபர் அசாம் , முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். ஆர்ஸ்தீப் சிங் , தனது முதல் பந்திலேயே பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து முகமது ரிஸ்வான் 4 ரன்கள் எடுத்த போது ஆர்ஸ்தீப் வீசிய ஷாட் பாலில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஷான் மகசூத், இப்திகார் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

160 ரன்கள் இலக்கு

160 ரன்கள் இலக்கு

இதனையடுத்து அக்சர் பட்டேல் வீசிய ஒரே ஓவரில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் விளாசியது. இதனால் 34 பந்தில் இஃப்திகார் அரைசதம் கடந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 14வது ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தது. அதிரடி வீரர்களான நவாஷ் 9 ரன்களும், ஆசிஃப் அலி 2 ரன்களிலும் வீழ்த்தினார். இதனையடுத்து 91 ரன்களில் 3 விக்கெட் இழந்த பாகிஸ்தான் அணி, 120 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷான் மகசூத் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தார். ஷாகின் ஆப்ரிடி தன் பங்கிற்கு 16 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில்159 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது .

ஏமாற்றிய ராகுல்

ஏமாற்றிய ராகுல்

இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் 4 ரன்களில் நஷிம் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மாவும் 4 ரன்களில் வெளியேறினார். இந்திய அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் 15 ரன்களில் வெளியேறினார்.

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

இதன் பிறகு அக்சர் பட்டேலுக்கு புரோமோஷன் வழங்கப்பட்டது. எனினும் 2 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். இதனையடுத்து விராட் கோலி, ஹிர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி முதலில் நிதானமாக விளையாடி விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்து கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் அதிரடியாக விளையாட, விராட் கோலி 43 பந்தில் அரைசதம் கடந்தார்.

திருப்புமுனை

திருப்புமுனை

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 19வது ஓவரில் கடைசி 2 பந்தில் விராட் கோலி சிக்சர் விளாச ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடைசி ஓவிரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது, முதல் பந்தில் ஹர்திக் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. 2வது பந்தில் ஒரு ரன்னும், 3வது பந்தில் டபுள்சும் இந்தியா எடுத்தது. 4வது பந்தில் விராட் கோலி சிக்சர் விளாச, அது நோ பால் என அறிவிக்கப்பட்டது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

மீண்டும் அந்த பால் ஓயிடாக, திரும்பவும் 4வது பந்து வீசப்பட்ட போது அது ஸ்டம்பில் பட விராட் கோலி 3 ரன்கள் ஓடினார். கடைசி 2 பந்தில் 2 ரன் தேவை என இருந்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது, அது மீண்டும் ஓயிடாக மாறியது. இதனையடுத்து 1பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது, அஸ்வின் பவுண்டரி விளாச இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 53 பந்தில் 82 ரன்கள் எடுத்தார்.

Story first published: Sunday, October 23, 2022, 17:51 [IST]
Other articles published on Oct 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+