Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட கடவுளே.. நியூசி,க்கு வந்த சோகம்.. இன்று பாகிஸ்தானுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம்.. ஏன் தெரியுமா

சிட்னி: நியூசிலாந்து அணியுடனான போட்டியில் பாகிஸ்தானுக்கு தான் வெற்றி பெறுவதற்கான சூழல்கள் நிறைந்துள்ளன.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அரையிறுதி சுற்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கடைசி கட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அரையிறுதி ஆட்டம்

அரையிறுதி ஆட்டம்

லீக் சுற்றின் போது நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் 7 புள்ளிகளை பெற்று எவ்வித பிரச்சினையும் இன்றி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் பாகிஸ்தான் அணியோ 6 புள்ளிகளை பெற்ற போதும், தொடரில் இருந்து வெளியேறுவது போன்று சென்றுவிட்டு, கடைசி நேரத்தில் உள்ளே நுழைந்துள்ளது. அதுவும் தொடர்ச்சியாக 3 வெற்றிகளுடன் நல்ல பலத்தி களமிறங்குகிறது.

பாக். க்கு சாதகம்

பாக். க்கு சாதகம்

இது ஒருபுறம் இருக்க, இதற்கு முந்தைய வரலாறுகளும் பாகிஸ்தானுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டும் இதுவரை பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் 3 முறை அரையிறுதியில் மோதியுள்ளன. இந்த 3 போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி தான் வெற்றி கண்டுள்ளன. அதுவும் அபார வெற்றிகள் ஆகும்.

முதல் அரையிறுதிப்போட்டி

முதல் அரையிறுதிப்போட்டி

1992ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போதும் பாகிஸ்தான் அணி கடைசி 3 போட்டிகளில் வெற்றி கண்டு தான் அரையிறுதிக்கு சென்றது. அப்போட்டியில் நியூசிலாந்து அணி 262 என கடின இலக்கை நிர்ணயிக்க, பாகிஸ்தான் அணி அதனை விரட்ட திணறியது. எனினும் கடைசி நேரத்தில் இன்சமாம் உல் அக் 37 பந்துகளில் 60 ரன்களை விளாசி த்ரில் வெற்றியை பதிவு செய்திருந்தது. அந்தாண்டு கோப்பையையும் வென்றிருந்தது.

1999ம் ஆண்டு உலகக்கோப்பை

1999ம் ஆண்டு உலகக்கோப்பை

1999ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியிலும் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த முறை 50 ஓவர்களில் 241 ரன்களை குவித்தது. அப்போது வாசீம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஒரு சைடாக போட்டியை வென்றது.

2007ம் ஆண்டு உலகக்கோப்பை

2007ம் ஆண்டு உலகக்கோப்பை

அதன்பிறகு 2007ம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியிலும் இந்த இரு அணிகளும் மோதியது. இதிலும் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 143/8 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது. இந்த மூன்று போட்டிகளிலுமே பாகிஸ்தானின் பவுலிங் மிரட்டலாக இருந்ததால், இந்தமுறையும் பவுலிங் சிறப்பாக காட்டினால் வெற்றி காணலாம்.

Story first published: Wednesday, November 9, 2022, 11:04 [IST]
Other articles published on Nov 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+