Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாறு நம்ம பக்கம்தான் அமைச்சரே.. பாகிஸ்தானை வச்சு வெளுத்துர வேண்டியதுதான்!

பிர்மிங்காம்: இந்தியா - பாகிஸ்தான் என்றாலே சண்டை, மோதல், பலப் பரீட்சை என்று பழக்கப்படுத்தி வைத்து விட்டார்கள். அந்த வகையில் நாளை மீண்டும் ஒரு மோதலைக் காண இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் தயாராகி வருகிறார்கள். இது சாம்பியன்ஸ் டிராபி மோதல்.

ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் கைதான் ஓங்கியிருக்கிறது என்பதால் இந்திய ரசிகர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு தெனாவெட்டாக காத்துக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாகிஸ்தான் ரசிகர்களோ, இந்த அவப் பெயரை மாத்தி, ஜெயிச்சுட்டு வாங்கய்யா என்று தங்களது வீரர்களுக்கு கோரிக்கை விடுத்துக் கொண்டுள்ளனர்.

இரு அணிகளும் பலமுறை மோதியுள்ள போதிலும் ஐசிசி போட்டிகளில் எப்போதுமே இந்தியாவின் கைதான் ஓங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

கடைசிப் போட்டி

கடைசிப் போட்டி

கடைசியாக இரு அணிகளும் 2015ம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் சந்தித்தன. அதில் இந்தியாதான் வென்றது. 2 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நாளை பிர்மிங்காமில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சந்திக்கவுள்ளன.

மெஜாரிட்டி நாமதான்

மெஜாரிட்டி நாமதான்

இந்தியாவும், பாகிஸ்தானும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 6 முறை மோதியுள்ளன. அதில் 6 முறையும் நமக்கே வெற்றி. அதேசமயம், சாம்பியன்ஸ் டிராபி போட்டியில ஒரு முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. 2 முறை பாகிஸ்தான் வென்றுள்ளது. ஆனால் மெஜாரிட்டி நாம்தான்.

முதல் போட்டியில் மோதிய அதே இடம்

முதல் போட்டியில் மோதிய அதே இடம்

2004ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில்தான் முதல் முறையாக இரு அணிகளும் மோதின. அந்தப் போட்டி நடந்த அதே எட்பாஸ்டன் மைதானத்தில்தான் இப்போது 4 வது முறையாக சந்திக்கவுள்ளன.

2015 போட்டியில்

2015 போட்டியில்

கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டி 2015 உலகக் கோப்பை போட்டி. டோணி தலைமையில் இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை அருமையாக வீ்ழத்தியது. பாகிஸ்தான் கேப்டனாக இருந்தவர் மிஸ்பா உல் ஹக். அடிலைடில் நடந்த இப்போட்டியில் விராத் கோஹ்லி 107 ரன்கள் குவித்தார். ஷிகர் தவன் 73, சுரேஷ் ரெய்னா 74 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தானின் சொஹைல் கான் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா இப்போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆசியா கோப்பைப் போட்டியில்

ஆசியா கோப்பைப் போட்டியில்

அதற்கு முன்பு 2014 ஆசியா கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானிடம் மயிரிழையில் வெற்றியைப் பறி கொடுத்தது. விராத் கோஹ்லி கேப்டன். வங்கதேசத்தில் போட்டி நடந்தது. ரோஹித் 56, அம்பட்டி ராயுடு 58, ஜடேஜா 52 ரன்கள் எடுத்தனர். அபாரமாக சேசிங் செய்தது பாகிஸ்தான். கடைசி ஓவரை அஸ்வின் போட்டார். 4 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷாஹித் அப்ரிதி, அபாரமாக 2 சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார்.

2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டி

2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டி

2013ல் இதே எட்பாஸ்டனில் இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மோதின. டோணி தலைமையில் இந்தியா ஆடியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 165 ரன்களில் சுருண்டது. மழை குறுக்கிட்டதால் இந்தியாவுக்கு 22 ஓவர்களில் 102 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தவன் 48 ரன்கள் எடுத்தார். விராத் கோஹ்லி, தினேஷ் கார்த்திக் மீத ரன்களை எடுத்து ஜெயிக்க வைத்தனர்.

வரலாறு நம் பக்கம்தான்.. மிதப்பில்லாமல் விளையாடினால் நிச்சயம் வரலாற்றைத் தக்க வைக்கலாம்.

Story first published: Saturday, June 3, 2017, 14:31 [IST]
Other articles published on Jun 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+