For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேஸ்பால் போட்டியில் விபரீதம்.. பந்து தலையில் பட்டு 9 வயது சிறுவன் மரணம்

விசிதா, அமெரிக்கா: அமெரிக்காவில் நடந்த பேஸ்பால் போட்டி ஒன்றின்போது பேட்டுகளை எடுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 9 வயது சிறுவன் வேகமாக வந்த பந்து தலையில் பட்டுத் தாக்கியதில் படுகாயமடைந்த பரிதாபமாக உயிரிழந்தான்.

கான்சாஸ் மாகாணத்தில், தேசிய பேஸ்பால் காங்கிரஸ் வேர்ல்ட் சீரிஸ் போட்டி நடந்து வருகிறது. விசிதா நகரில் நடந்த இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தபோது, கெய்சர் கர்லைல் என்ற 9 வயது சிறுவன் பேட் பாயாக அதாவது வீரர்களின் பேட்டுகளை எடுத்துக் கொடுக்கும் பேட் பாய் ஆக செயல்பட்டு வந்தான்.

Hit in head by swing at baseball game, bat boy dies

அப்போது ஒரு வீரர் அடித்த பந்து வேகமாக வந்து சிறுவனின் தலையில் பட்டு விட்டது. இத்தனைக்கும் சிறுவன் தலையில் ஹெல்மெட் போட்டிருந்தான். ஆனால் அதையும் மீறி தாக்குதல் பலமாக இருந்ததால் சிறுவன் நிலை குலைந்து விழுந்தான்.

உடனடியாக கெய்சரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அமெரி்க்காவில் சோகம் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் மறைவைத் தொடர்ந்து பேஸ்பால் போட்டிகளில் பேட் பாய் மற்றும் பேட் கேர்ள் ஆகியோரைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை கான்சாஸ் பேஸ்பால் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

Story first published: Tuesday, August 4, 2015, 8:36 [IST]
Other articles published on Aug 4, 2015
English summary
A 9-year-old bat boy has died after he was accidentally hit in the head during a lower tier National Baseball Congress World Series game in Kansas. The boy was struck by a follow-through swing near the on-deck circle on Saturday afternoon. A spokesman for the National Baseball Congress says the child was wearing a helmet, which is mandatory.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X