அனுஷ்காவை கழுவிக் கழுவி ஊத்தியவர்களை 'கிளீன் போல்டு' ஆக்கிய கோஹ்லி
மும்பை: என்ன தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனுஷ்காவை திட்டித் தீர்த்தாலும் அவருக்கு அவரின் காதலர் கோஹ்லியின் முழு ஆதரவு உள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி என்று பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்க ஆரம்பித்தாரோ அன்றே அவருக்கு கெரகம் பிடித்துவிட்டது என்று இந்திய ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தான் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தை காண அனுஷ்கா சிட்னி சென்றார்.
ஸ்டேடியத்தில் அனுஷ்காவை பார்த்த பலர் இன்றைய ஆட்டம் விளங்கியமாதிரி தான் என்றனர். அவர்கள் நினைத்தது போன்று இந்திய அணி தோல்வி அடைந்தது.

அனுஷ்கா
அரையிறுதிப் போட்டியில் அசத்துவார் என்று நினைத்த கோஹ்லி வெறும் ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். கோஹ்லி ஒழுங்காக விளையாடாததற்கு அனுஷ்கா தான் காரணம் என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

சமூக வலைதளங்கள்
இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு அனுஷ்கா தான் காரணம் என்று கூறி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊத்தினர்.

மும்பை
அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் மும்பை வந்தனர். கோஹ்லி அனுஷ்காவின் கைகோர்த்து விமான நிலையத்தில் நடந்து வந்தார். யார் திட்டினாலும் திட்டுங்கள் என் ஆதரவு அனுஷ்காவுக்கே என்பது போன்று அவர் கைகோர்த்து நடந்து வந்தார்.

கோஹ்லி
விமான நிலையத்தில் கோஹ்லியின் கண்களில் கோபம் இருந்தபோதிலும் அவர் அதை காட்டிக் கொள்ளாமல் அனுஷ்காவை பத்திரமாக காருக்கு அழைத்துச் சென்றார்.

ஆதரவு
அனுஷ்கா தனக்கு ராசியில்லை என்று யார் கூறினாலும் அதை எல்லாம் காதில் வாங்காமல் உண்மையான காதலராக தனது காதலிக்கு ஆதரவாக உள்ளார் கோஹ்லி.


Click it and Unblock the Notifications