அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியும் வங்கதேச அணியும் பலப் பரீட்சை நடத்துகிறது. இந்தத் தொடரில் ஹாங்காங் அணி ஏற்கனவே முதல் போட்டியில் விளையாடி தோல்வியை தழுவிய நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது.
அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசுகிறோம் என்று கூறிவிட்டார். இதன் மூலம் மிகப்பெரிய சிக்கலில் தற்போது ஹாங்காங் மாட்டியுள்ளது. பொதுவாக கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக பெரிய அணிகள் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவிக்கும்.

ஆனால் தற்போது பெரிய அணிகள் முதலில் பந்து வீசும் முடிவை எடுக்கிறது.அந்த வகையில் இன்று வங்கதேசம் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்வது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ், இது எங்களுக்கு முதல் போட்டி நாங்கள் முதலில் பந்துவீசி ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்க்கப் போகிறோம்.
நாங்கள் கடந்த மூன்று தொடர்களாக சிறப்பாக விளையாடி வருகிறோம்.
இது எங்களுக்கு புதிய தொடர் இதிலும் நாங்கள் நன்றாக விளையாட வேண்டும். இந்த தொடருக்கு பயிற்சி ஆட்டம் எதுவும் இல்லை. எனவே ஆரம்பத்திலிருந்து எங்களுடைய நூறு சதவீத பங்களிப்பை நாங்கள் தர வேண்டும் என்று லிட்டன்தாஸ் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய ஹாங்காங் அணி கேப்டன் முர்தாசா, நாங்கள் டாசை வென்று இருந்தால், முதலில் பேட்டிங் தான் தேர்வு செய்திருப்போம். நாங்கள் முதல் போட்டியில் சில தவறுகளை செய்து விட்டோம். இன்றைய ஆட்டத்தில் அந்த தவறுகளை நாங்கள் திரும்பச் செய்ய மாட்டோம் என நம்புகிறேன். முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முயற்சி செய்வோம்.
இது புதிய நாள், இந்த புதிய நாளில் நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். அபுதாபியில் பனிப்பொழிவு இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும் என்பதால் தான் அனைத்து அணிகளும் முதலில் பந்து வீச முயற்சி செய்வதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் சிறிய அணிகளுக்கு எதிராக இரவு நேரத்தில் பந்து வீசும் அனுபவத்தை பெற வேண்டும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.