Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு எவ்வளவு கேவலம் பாருங்க!

ஹோபர்ட்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஒரு இன்னிங்ஸ் 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க தொடரை கைப்பற்றியது.

ஹோபர்ட்: ஹோபர்ட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஒரு இன்னிங்ஸ் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா தொடரையும் வென்று ஆஸ்திரேலியாவை சிதறடித்து விட்டது.

Hobart Test: South Africa humiliate Australia by innings and 80 runs, clinch series

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இவ்வளவு கேவலமாக தோற்பது என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் கடுமையாக தாக்கி சமூக வலைதளங்களில் குமுறிக் கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வைத்து தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றதை ஆஸ்திரேலியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஹோபர்ட்டில் நடந்தது 2வது டெஸ்ட் போட்டியாகும்.

தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் கைல் அப்பாட் இப்போட்டியில் கலக்கி விட்டார். அதிரடியாக பந்து வீசிய அவர் 118 ரன்களைக் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்களைச் சாய்த்து ஆஸ்திரேலியாவை முறித்துப் போட்டு விட்டார். காயமடைந்த பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் இவர்.

Hobart Test: South Africa humiliate Australia by innings and 80 runs, clinch series

அப்பாட் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் சாய்த்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை காலி செய்தார் அப்பாட்.

மறுபக்கம் இளம் புயல் காகிஸோ ரபதா கலக்கினார். 2வது இன்னிங்ஸில் அவர் 4 விக்கெட்களைத் தூக்கினார். முன்னதாக முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 85 ரன்களுக்கு சுருட்டிப் போட்டது தென் ஆப்பிரிக்கா. 2வது இன்னிங்ஸில் அந்த அணியால் 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்திருந்தது.

2வது டெஸ்ட் போட்டி 4வது நாளே முடிந்து போய் விட்டது. உஸ்மான் காஜா (64), டேவிட் வார்னர் (45), ஸ்டீவ் ஸ்மித் (31) ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலிய அணியில் இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தவர்கள் ஆவர். மற்றவர்கள் சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாக்கப்பட்டனர்.

தென் ஆப்பிரிக்காவின் இன்னிங்ஸில் குவின்டன் டி காக் அபாரமாக ஆடி 104 ரன்களைக் குவித்தார். டாப் ஆர்டரில் கலக்கிய தென் ஆப்பிரிக்கா கீழ் வரிசையில் சற்றே சொதப்பியது. இதன் காரணமாக கீழ் வரிசையில் 6 விக்கெட்களைச் சாய்த்தார் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேஸல்வுட்.

Story first published: Tuesday, November 15, 2016, 12:07 [IST]
Other articles published on Nov 15, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+