Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாக்கி உலக லீக் அரையிறுதி.. பரம எதிரி பாகிஸ்தானுடன் இந்தியா மோதிய ஆட்டம் "டிரா"..

ஆண்ட்வெர்ப் : ஹாக்கி உலக லீக் அரையிறுதிப் போட்டியில் அனைத்து விளையாட்டுக்களிலும் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதிய ஆட்டம் டிரா ஆனது.

பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் ஹாக்கி உலக லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. "ஏ" பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இன்று இரவு (26-06-2015) தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

indian hockey

போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. 13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ராமன்தீப் சிங் முதல் கோலை பதிவு செய்தார்.

23-வது நிமிடத்தில் பாகிஸ்தான் பதில் கோல் அடித்து சமன் செய்தது. அந்த அணியின் முகமது இர்பான் அந்த கோலை அடித்தார். அடுத்த 7-வது நிமிடத்தில் முகமது இம்ரான் மேலும் ஒரு கோல் அடிக்க, பாகிஸ்தான் 2-1 என முன்னிலை பெற்றது.

25-வது நிமிடத்திலேயே இந்தியா இதற்கு பதிலடி கொடுத்தது.
இந்திய வீரர் ராமன்தீப் சிங் பதில் கோல் அடித்தார். அதன்பின்னர் ஆட்ட நேரம் முடியும் வரை இருதரப்பிலும் கோல்கள் வாங்காததால் இந்த போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.

சற்று முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக இந்திய வீரர்கள் சத்பிர் சிங், தேவிந்தர் வால்மீகி ஆகியோர் மஞ்சள் அட்டை பெற்றனர்.

இந்திய அணி முதல் போட்டியில் பிரான்சை 3-2 என்ற கோல் கணக்கிலும், 2-வது போட்டியில் போலந்தை 3-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.

இப்போட்டி 2-2 என சமநிலையில் முடிந்து. இதன்மூலம் இந்தியா ஏ பிரிவில் 7 புள்ளிளுடன் முதல் இடத்தில் உள்ளது.

Story first published: Friday, June 26, 2015, 22:09 [IST]
Other articles published on Jun 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+