ஹாங்காங் 38 ரன்களில் சுருண்டது.. சாதனை படைத்த பாகிஸ்தான்.. மீண்டும் இந்தியாவுடன் மோதும் பாக்.
துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங்க்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி பந்தாடியது.
Recommended Video
இதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி வரும் ஞாயிற்றுகிழமை மீண்டும் இந்தியாவுடன் மோதுகிறது.
இதன் மூலம் ரவுண்ட் 2விற்கு ரோகித் சர்மா படையும், பாபர் அசாம் படையும் தயாராகி விட்டது. இது ரசிகர்களையும் குதுகலப்படுத்தியுள்ளது.

பொறுமையான ஆட்டம்
டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீசியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரிஸ்வான் ஃபகர் ஷமான் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பாகிஸ்தான் அணி 10 ஓவரில் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் பிறகு தான் பாகிஸ்தான் தங்களத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹாங்காங்க்கு அதிர்ச்சி அளித்தனர்.

அடுத்தடுத்து அரைசதம்
ஃபகர் சமான் 41 பந்துகளை எதிர்கொண்ட 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் பிறக ஜோடி சேர்ந்த குஷ்தில் ஷா முதலில் பொறுமையாக ஆடினார். மறுபுறும் ரிஸ்வான் தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகபடுத்தும முயற்சியில் ஈடுபட்டார். 57 பந்துகளில் ரிஸ்வான் 78 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும்,ஒரு சிக்சரும் அடங்கும்.

29 ரன்கள்
மறுமுனையில் குஷ்தில் ஷா, கடைசி ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார். இதில் வரிசையாக 4 இமாலய சிக்சர் மற்றும் ஓயிடு பாலில் 4 ரன்கள் என கடைசி ஓவரில் பாகிஸ்தான் 29 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.

38 ரன்களில் சுருண்டது
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி பாகிஸ்தானின் அசுர வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. ஒரு பக்கம் வேகப்பந்துவீச்சு, மறுபக்கம் சுழற்பந்தவீச்சு என இரட்டை தாக்குதலை பாபர் அசாம் நடத்தினார். இதில் ஹாங்காங் நிலைக்குலைந்து போனது. ஒரு கட்டத்தில் 10.4 வது ஓவரில் ஹாங்காங் அணி 38 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications