2025 ஹாங்காங் சிக்ஸஸ் - இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் எங்கு பார்ப்பது? போட்டி அட்டவணை, அணிகள், நேரலை
ஹாங்காங்: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, அதிரடியான "ஹாங்காங் சிக்ஸஸ்" கிரிக்கெட் தொடர் இன்று (நவம்பர் 7) தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், நவம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறவுள்ளன.
ஹாங்காங் சிக்ஸஸ் என்றால் என்ன?
ஹாங்காங் சிக்ஸஸ் என்பது 1990களில் தொடங்கப்பட்ட ஒரு அதிவேக கிரிக்கெட் தொடராகும். ஹாங்காங்கில் உள்ள உள்ளூர் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சர்வதேச நட்சத்திர வீரர்களின் ஆட்டத்தை நேரில் காணும் வாய்ப்பை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இது ஒரு கண்காட்சிப் போட்டியாக இல்லாமல், ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச நிகழ்வாக உருவானது. இந்தத் தொடர் 1993 முதல் 1997 வரையிலும், பின்னர் 2001 முதல் 2012 வரையிலும் நடைபெற்றது. இடையில் 2017-ல் ஒருமுறை நடத்தப்பட்டு, மீண்டும் 2024-ல் தொடங்கப்பட்டது.

போட்டியின் வடிவம் மற்றும் விதிமுறைகள்
இது வழக்கமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதன் விதிமுறைகள்:
- ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் மட்டுமே இருப்பார்கள்.
- ஒவ்வொரு அணியும் தலா 5 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்யும்.
- ஒரு போட்டி சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்.
- விக்கெட் கீப்பரைத் தவிர, அணியில் உள்ள மற்ற ஐந்து வீரர்களும் தலா ஒரு ஓவர் பந்துவீச வேண்டும்.
- ஒரு பேட்ஸ்மேன் 31 ரன்களை எட்டியதும் 'ரிட்டையர்' ஆக வேண்டும். இருப்பினும், அணியின் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தால், அவர் மீண்டும் களமிறங்கலாம்.
பங்கேற்கும் அணிகள் மற்றும் குழுக்கள்
இந்தத் தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
குழு A: தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், நேபாளம்
குழு B: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம்
குழு C: இந்தியா, பாகிஸ்தான், குவைத்
குழு D: இலங்கை, வங்கதேசம், ஹாங்காங்
முழு போட்டி அட்டவணை (இந்திய நேரப்படி)
நவம்பர் 7
- காலை 5:45: வங்கதேசம் vs ஹாங்காங்
- காலை 6:40: இங்கிலாந்து vs ஐக்கிய அரபு அமீரகம்
- காலை 7:35: பாகிஸ்தான் vs குவைத்
- காலை 8:30: ஆப்கானிஸ்தான் vs நேபாளம்
- காலை 9:25: இலங்கை vs ஹாங்காங்
- காலை 11:15: தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்
- பிற்பகல் 12:10: இலங்கை vs வங்கதேசம்
- பிற்பகல் 1:05: இந்தியா vs பாகிஸ்தான்
- பிற்பகல் 2:00: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
நவம்பர் 8
- காலை 5:45: தென்னாப்பிரிக்கா vs நேபாளம்
- காலை 6:40: இந்தியா vs குவைத்
- காலை 7:35: பவுல் 1வது போட்டி
- காலை 8:30: பவுல் 2வது போட்டி
- காலை 9:25: காலிறுதி 1
- காலை 10:20: காலிறுதி 2
- காலை 11:15: பவுல் 3வது போட்டி
- பிற்பகல் 12:10: பவுல் 4வது போட்டி
- பிற்பகல் 1:05: காலிறுதி 3
- பிற்பகல் 2:00: காலிறுதி 4
நவம்பர் 9
- காலை 5:45: பவுல் 5வது போட்டி
- காலை 6:40: பிளேட் அரையிறுதி 1
- காலை 7:35: பிளேட் அரையிறுதி 2
- காலை 8:30: பவுல் 6வது போட்டி
- காலை 9:25: முதல் அரையிறுதி
- காலை 10:20: இரண்டாவது அரையிறுதி
- காலை 11:15: பவுல் இறுதிப் போட்டி
- பிற்பகல் 12:10: பிளேட் இறுதிப் போட்டி
- பிற்பகல் 1:05: இறுதிப் போட்டி
அணிகளின் முழுமையான வீரர்கள் விவரம்:
இந்திய அணி: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஸ்டூவர்ட் பின்னி, பாரத் சிப்லி, அபிமன்யு மிதுன், ஷாபாஸ் நதீம், பிரியங்க் பஞ்சால், ராபின் உத்தப்பா.
ஆஸ்திரேலிய அணி: அலெக்ஸ் ராஸ் (கேப்டன்), பென் மெக்டெர்மாட், ஜாக் வுட், நிக் ஜிப்ஸன், கிறிஸ் கிரீன், வில் போசிஸ்டோ, ஆண்ட்ரூ டை.
இங்கிலாந்து அணி: ஜோ டென்லி (கேப்டன்), ஜேம்ஸ் கோல்ஸ், ஈதன் புரூக்ஸ், டோபி ஆல்பர்ட், ஜார்ஜ் ஹில், டான் மவுஸ்லி, டாம் அஸ்பின்வால்.
வங்கதேச அணி: அக்பர் அலி (கேப்டன்), அபு ஹைதர் ரோனி, ஜிஷான் ஆலம், முகமது சைபுதீன், மொசாதெக் ஹொசைன், ரகிபுல் ஹசன், டோஃபீல் அகமது.
ஐக்கிய அரபு அமீரக அணி: கௌஷிக் ஹர்ஷித் (கேப்டன்), காலித் ஷா, முஹம்மது அர்ஃபான், முஹம்மது ஃபரூக், முஹம்மது சகீர் கான், நிலான்ஷ் கேஸ்வானி, ரெஜித் குருங்கோட், ஜாஹித் அலி.
குவைத் அணி: யாசின் படேல் (கேப்டன்), உஸ்மான் படேல், மீட் பவ்சார், பிலால் தாஹிர், ரவிஜா சந்தருவன், அட்னான் இட்ரீஸ், முகமது ஷஃபீக்.
நேபாள அணி: சரத் வெசாவ்கர் (கேப்டன்), சுந்தீப் ஜோரா, லோகேஷ் பாம், பசிர் அஹமத், ஆதில் ஆலம், ரஷீத் கான், ரூபேஷ் சிங்.
இலங்கை அணி: லஹிரு மதுஷங்கா (கேப்டன்), தனஞ்சயா லக்ஷன், தனுக்கா தபாரே, நிமேஷ் விமுக்தி, லஹிரு சமரகோன், தரிந்து ரதநாயகே, சசித ஜெயதிலகே.
தென்னாப்பிரிக்க அணி: ஜோர்டான் மோரிஸ் (கேப்டன்), அப்துல்லா பயோமி, ஈதன் கன்னிங்ஹாம், இம்புலெலோ டியூப், காஷீஃப் ஜோசப், பிளேக் சிம்ப்சன், வான் ஷால்க்விக்.
ஹாங்காங் அணி: யாசிம் முர்தாசா (கேப்டன்), பாபர் ஹயாத், அன்ஷுமன் ராத், ஐசாஸ் கான், நிசாகத் கான், எஹ்சான் கான், நஸ்ருல்லா ராணா.
ஆப்கானிஸ்தான் அணி: குல்பாடின் நைப் (கேப்டன்), இக்ராம் அலிகில், கரீம் ஜனத், ஷரஃபுதீன் அஷ்ரப், ஃபர்மானுல்லா சஃபி, இஜாஸ் அஹ்மத் அஹ்மத்சாய், செடிக்குல்லா பச்சா.
பாகிஸ்தான் அணி: அப்பாஸ் அஃப்ரிடி (கேப்டன்), அப்துல் சமத், கவாஜா முகமது நஃபே, மாஸ் சதாகத், முகமது ஷாசாத், சாத் மசூத், ஷாஹித் அஜீஸ்.
நேரடி ஒளிபரப்பு
இந்தத் தொடரின் போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 தொலைக்காட்சி சேனலிலும், FanCode செயலி மற்றும் இணையதளத்திலும் நேரலையில் காணலாம்.


Click it and Unblock the Notifications