வாவ்.. இந்தியா -பாக்.குக்கு வசமாக சிக்கியது ஹாங்காங்.. ஆசிய கோப்பைத் தொடருக்கு தகுதி!
மலேசியா : ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் ஆறாவது அணியாக ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை யுனைடெட் அரபு எமிரேட்சில் நடைபெறவிருக்கிறது. இத்தொடரில் இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்,இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

ஆறாவதாக தகுதி பெறக்கூடிய அணிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வந்தன. தகுதிசுற்று போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் விளையாட யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியும் ஹாங்காங் அணியும் தகுதி பெற்றன.
மழையின் காரணமாக 24 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய யுஏஇ அணி 24 ஓவர்களில் 176 ரன்களை குவித்தது. அந்த அணியின் அஷபாக் அஹமத் 79 ரன்களை குவித்தார். ஹாங்காங் அணியின் ஐசாஸ் கான் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து ஆடிய ஹாங்காங் அணி 23.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. ஹாங்காங் அணியின் கார்டர் மற்றும் எசன் கான் ஆகியோர் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஹாங்காங் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.
ஹாங்காங் அணி பி பிரிவில் பங்கேற்கிறது.இதில் மற்ற அணிகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உள்ளன.
ஹாங்காங் அணி செப்டம்பர் 16ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.
Story first published: Friday, September 7, 2018, 10:23 [IST]
Other articles published on Sep 7, 2018


Click it and Unblock the Notifications