டோணிக்கு கௌரவ டாக்டர் பட்டம்?: ஜார்க்கண்ட அரசு ஆலோசனை
ராஞ்சி: இந்தியாவுக்கு உலகக் கோப்பை பெற்றுத் தந்துள்ள அணியின் கேப்டன் டோணிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஜார்க்கண்ட் மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

28 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு உலகக் கோப்பை வென்று தந்துள்ளது டோணி தலைமையிலான அணி. நாட்டு மக்கள் சந்தோஷத்தில் துள்ள, பெருமை தேடித் தந்த அணிக்கு பரிசுகள் குவிகின்றன.
டோணிக்கு கிரிக்கெட் அகாதெமி அமைக்க ஜார்க்கண்ட் அரசு நிலம் வழங்கியுள்ளது. தற்போது கௌரவ டாக்டர் பட்டம் பற்றிய பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
இது குறித்து ஜார்க்கண்ட் மாநில மனிதவளத்துறை அமைச்சர் பைஜன்த் ராம் கூறியதாவது,
கிரிக்கெட் துறையில் டோணி தான் சிறந்த வீரர். அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்பது மனிதவளத்துறையின் ஆசை.
நான் இது குறித்து முதல்வர் அர்ஜுன் முன்டாவிடமும், கல்வியாளர்களிடமும் தெரிவித்துள்ளேன். இந்த பட்டத்திற்கு தகுதியானவர் டோணி.
இந்திய அணியின் கூட்டு முயற்சியால் தான் இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல முடிந்தது. பல ஆண்டுகள் கழித்து கோப்பையை வென்று பெருமைத் தேடித்தந்துள்ள டோணி உள்ளிட்ட வீரர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என்றார்.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு படங்கள்
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications