புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் இன்றைய தினம் துவங்கி நடைபெறவுள்ளது.
கடந்த டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இந்தியா அபாரமாக வெற்றி கொண்டுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் தொடரை இந்திய அணி 3க்கு 0 என்ற கணக்கில் வெற்றி கொள்ளும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்துஇடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்றைய தினம் துவங்கவுள்ளது. கடந்த டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த ஒருநாள் தொடரிலும் வெற்றி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே கருத்தை இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய அணி 3க்கு 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெற்றி கொள்ளும் என்று வாகன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.