Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி பொண்டாட்டி அனுஷ்கா ஹாட்டான நடிகையா... இல்லையா? இந்திய இளம் பவுலரின் வைரல் பதில்

மும்பை: கோலியின் மனைவியை விட, தீபிகா படுகோனே தான் மிகவும் செக்சியான நடிகை என்று இளம் பவுலர் பும்ரா கூறியிருக்கிறார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. தொடர்ந்து பல சாதனைகளை படைத்து இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில், டெஸ்ட் போட்டியில் அபாராமாக பந்துவீசி தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணியுடனான டி20 தொடர் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. அதற்கான பயிற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த தருணத்தில் அவர் யு டியூப் சேனல் ஒன்றில் பங்கேற்ற பேட்டி ஒன்று வைரலாகி இருக்கிறது.

பும்ரா பேட்டி

பும்ரா பேட்டி

பும்ரா யூடியூப் சேனலில் பல கேள்விகளை சரமாரியாக கேட்கிறார். அந்த பேட்டியில் அவருக்கு பல கடினமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கெல்லாம் உடனுக்குடன் சளைக்காமல் பதிலளித்தார்.

தோனி தான் பெஸ்ட்

தோனி தான் பெஸ்ட்

பிடித்த கேப்டன், பிடித்த வேகப்பந்துவீச்சாளர் என பல கேள்விகளை லாவகமாக சமாளித்து பதில்களை சொன்னார். கோலி, தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்பதற்கு என்னை பொறுத்தவரை தோனி தான் என்று பும்ரா பதிலளித்தார்.

அசத்தல் பதில்கள்

அசத்தல் பதில்கள்

சிறந்த பவுலிங் ஆக்ஷன் மலிங்கா, சோயிப் அக்தர் என அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை அள்ளி வீசி அசத்தினார். பல கேள்விகளை முன்வைத்த போதும் அனைத்து கேள்விகளுக்கும் சற்றும் அசராமல் பதிலளித்தார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

அப்போது தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா இவர்களில் யார் ஹாட்டான, செக்சியான நடிகை என்ற கேள்வியை தொகுப்பாளினி கேட்டார். அந்த கேள்வியை உள்வாங்கிய அடுத்த விநாடியே தீபிகா படுகோனே தான் என்று பதிலளித்தார்.

வைரல் பேட்டி

வைரல் பேட்டி

தீபிகா படுகோனே என்ற பதில் தான் பாதுகாப்பானது என்று நினைக்கிறேன் என்று பதிலளித்தார். இந்த பேட்டி தான் தற்போது இணையத்தில் ஏகத்துக்கும் வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, September 10, 2019, 22:03 [IST]
Other articles published on Sep 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+