Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதனால் தான் இவர் மாஸ்டர்”.. 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அஸ்வின் உடைத்தது எப்படி??.. அடேங்கப்பா!

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் பாதைக்கு சென்ற இந்திய அணியை சரியான நேரத்தில் இழுத்து பிடித்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி முந்தைய 3 போட்டிகளில் இல்லாத வகையில் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக உஸ்மான் கவாஜா அச்சுறுத்தல் கொடுத்துள்ளார்.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் வீரர் டிராவிஸ் ஹெட் (32), மார்னஸ் லபுசாக்னே (3), ஸ்மித் (38), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் (17) என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால் 170 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துவிட்டது. எனினும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் ஜோடி 200 ரன்களுக்கும் மேலாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கவாஜா அச்சுறுத்தல்

கவாஜா அச்சுறுத்தல்

ஒருபுறம் உஸ்மான் கவாஜா 150 ரன்களுக்கு மேல் அடிக்க, மறுபுறம் கேமரூன் கிரீன் சதமடித்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 378 ரன்களை குவித்தது. ஒருவேளை இதே நிலையுடன் 400 ரன்களை தாண்டிவிட்டால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறைந்துவிடும் என ரசிகர்கள் நம்பிக்கை இழந்து இருந்தனர்.

அஸ்வின் தந்த கம்பேக்

அஸ்வின் தந்த கம்பேக்

இந்நிலையில் நான் இருக்கிறேன் என வழக்கம் போல அட்டகாச கம்பேக்கை கொடுத்தார். கேமரூன் கிரீன் அதிரடியாக ஆடுகிறார் என்பதை உணர்ந்த அஸ்வின், ஸ்வீப் ஷாட் அடிக்கடி பயன்படுத்துகிறார் என்பதையும் பார்த்தார். இதனை சரியாக பயன்படுத்திய அவர், கால்களுக்கு கீழ் நன்கு தூக்கிப்போட்டார். ஆனால் அந்த பந்து மிக மெதுவாக வந்ததை கவனிக்காத கிரீன், ஃபுல்டாஸை ஸ்வீப் ஆட முயன்றார். இதனால் பந்து பேட்டின் மீது உரசி கீப்பரிடம் சென்றுவிட்டது.

மாஸ்டர் ப்ளான்

மாஸ்டர் ப்ளான்

இதோடு நிற்காத அஸ்வின், அதே ஓவரில் அலெக்ஸ் கேரியையும் காலி செய்தார். வந்துவுடனேயே கேரி ரன் குவிக்க ஆசைப்படுவதை பார்த்த அவர், அழகாக தூக்கி அடிப்பது போல பந்தை போட்டு, எலிக்கு பொறி வைத்ததை போல பிடித்தார். இதனால் 378 ரன்களுக்கு 6 விக்கெட்களை ஆஸ்திரேலியா இழந்தது. இதன் பின்னர் லோயர் ஆர்டரை சுலபமாக வீழ்த்தலாம் எனத்தெரிகிறது.

Story first published: Friday, March 10, 2023, 14:14 [IST]
Other articles published on Mar 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+