லஞ்சுக்கு முன் பும்ரா கொடுத்த "பன்ச்".. இங்கிலாந்தை பதம் பார்த்த கோலி.. ரிவர்ஸ் ஸ்விங் தந்திரம்!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக இன்று இந்திய அணியின் கேப்டன் கோலி வகுத்த திட்டம் பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. அஸ்வின், பும்ரா தலா 1 விக்கெட் எடுத்துள்ளனர்.
உணவு இடைவேளை வரை ஆடி உள்ள இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து 67 ரங்கள் எடுத்துள்ளது.இந்திய அணி 27 ஓவர்களை வீசி உள்ளது.

இங்கிலாந்து
இங்கிலாந்து தொடக்கத்தில் இந்த போட்டியில் சிறப்பாகவே ஆடி வந்தது. ஓப்பனிங் வீரர்கள் 20 ஓவர்களை கடந்த நிதானமாக ஆடி வந்தனர். பிட்ச் பெரிய அளவில் ஸ்விங் ஆகவில்லை. இதனால் அஸ்வின், நதீமிற்கு கோலி மாறி மாறி ஓவர் கொடுத்தார். அஸ்வின் மட்டும் கொஞ்சம் சரியான லைனில் பவுலிங் செய்தார்.

அஸ்வின்
இப்படிப்பட்ட நிலையில்தான் 24வது ஓவரில் அஸ்வின் வரிசையாக சரியாக லைனில் பவுலிங் செய்தார். இதை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர் பர்ன்ஸ் கொஞ்சம் திணறினார். இதை பயன்படுத்தி பெரிதாக ஸ்விங் இல்லாமல் ஸ்டம்பை நோக்கி அஸ்வின் வீசினார்.

ஸ்விப்
இதை தேவையின்றி ஸ்விப் செய்த பர்ன்ஸ் பண்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்தான் ஆட்டத்தை மாற்றியது.இதற்கு அடுத்த மீண்டும் ஸ்பின் பவுலர்தான் பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. லன்ச் வேறு வர இருப்பதால் அஸ்வின்தான் தொடர்ந்து ஓவர் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பும்ரா
ஆனால் அஸ்வினுக்கு பதிலாக பும்ராவை கோலி கொண்டு வந்தார். லன்ச் பிரேக்கிற்கு இரண்டு ஓவர்களுக்கு முன் சரியாக பும்ராவை கோலி களமிறங்கினார். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்து பும்ராவை கோலி களமிறங்கினார். கோலி எதிர்பார்த்தது போலவே பந்து ஸ்விங் ஆனது.

அவுட்
சரியாக அந்த ஓவரில் அடுத்தடுத்து பந்து ஸ்விங் ஆனது. இதில் எதிர்பார்த்தபடி டான் லாரன்ஸ் அவுட் ஆனார். பும்ரா வீசிய இன் ஸ்விங்கில் லாரன்ஸ் எல்பிடபிள்யூ ஆனார். பிட்ச் மொத்தமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆக தொடங்கியதால் பும்ராவிற்கு கோலி ஓவர் கொடுத்தார், இதன் காரணமாக கை மேல் பலனாக விக்கெட் விழுந்தது.


Click it and Unblock the Notifications