Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனைத்து சீசனிலும் பிளே-ஆஃப் சென்ற ஒரே அணி சிஎஸ்கே தான்.. எப்படி தெரியுமா? ரகசியத்தை சொன்ன பிராவோ!!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் சிறந்த அணியாக வலம் வருகிறது. தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பிளே-ஆஃப் சென்ற ஒரே அணி சிஎஸ்கே தான்.

அதிலும், ஏழு முறை இறுதிப் போட்டியில் ஆடிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது சென்னை அணி. இந்த தொடர் வெற்றிக்கு என்ன காரணம்? என்பது குறித்து அந்த அணியின் டிவைன் பிராவோ கூறினார்.

வெற்றி ரகசியம்

வெற்றி ரகசியம்

பிராவோ கூறுகையில், சென்னை அணியின் வெற்றி ரகசியம் முக்கிய வீரர்களையும், பயிற்சியாளர்களையும் தொடர்ந்து தக்க வைத்தது தான் என குறிப்பிட்டுள்ளார். இந்த நம்பிக்கை தான் பலனை அளித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டு தடை

இரண்டு ஆண்டு தடை

சென்னை அணி 2016-17 ஆண்டுகளில் தடை பெற்று ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. அந்த தடையில் இருந்து மீண்டு வந்த போது சென்னை அணி தன் முக்கிய வீரர்கள் அனைவரையும் தக்க வைத்தது.

அனுபவசாலிகள்

அனுபவசாலிகள்

அப்போது பலரும் சென்னை அணி வயதான வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது வயதான அணி என கேலி செய்த போது, அமைதியாக இருந்த சென்னை அணி, கடந்த சீசனில் கோப்பை வென்ற பின், இது வயது அல்ல, அனுபவசாலிகள் நிறைந்த அணி என சொல்ல வைத்தது.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

இளம் வீரர்களை மட்டுமே நம்பாமல், வயதானாலும் மூத்த வீரர்களின் அனுபவத்தை நம்பி தொடர்ந்து தக்க வைத்ததே சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார் பிராவோ.

30+ வயது

30+ வயது

சென்னை அணியில் தோனி, பிராவோ, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா. ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு என பல வீரர்கள் 30+ வயது கொண்டவர்கள். கடந்த சீசனைப் போல இந்த முறையும் அதே அனுபவ அணியைத் தான் சென்னை அணி ஆட வைக்கப் போகிறது.

Story first published: Friday, March 22, 2019, 17:39 [IST]
Other articles published on Mar 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+