Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"என்ன மனுஷன்யா".. 2007 உலகக் கோப்பை தோல்வி.. தோனியிடம் டிராவிட் சொன்ன "அந்த" வார்த்தை

மும்பை: 2007 உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு ஒரு கேப்டனாக, ராகுல் டிராவிட் இந்திய அணியை எப்படி மோட்டிவேட் செய்தார் என்பது குறித்து இர்பான் பதான் மனம் திறந்துள்ளார்

Recommended Video

CSK and Dhoni Fansக்கு Good News சொன்ன Kasi Viswanathan | IPL 2021 | OneIndia Tamil

2007ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை இந்திய ரசிகர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அதுபோல் நினைவில் வைத்திருக்கவும் விரும்ப மாட்டார்கள்.

அப்படியொரு மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்தது. தொடரை விட்டும் வெளியேறியது.

வெளியேறிய இந்திய அணி

வெளியேறிய இந்திய அணி

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டி அணியான வங்கதேசத்திடம் ராகுல் டிராவிட் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பிறகு, பெர்முடாவை போட்டு துவைத்து எடுத்து, 400 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றிப் பெற்றாலும், அடுத்த போட்டியில் மீண்டும் இலங்கையிடம் தோற்க, லீக் சுற்றோடு தொடரை விட்டு வெளியேறியது இந்திய அணி. ரசிகர்களை அந்த தோல்வியை சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கோபத்தில் சுற்றிய ரசிகர்கள்

கோபத்தில் சுற்றிய ரசிகர்கள்

இந்திய அணி வீரர்கள் இந்தியா வந்திறங்கிய போது, வீரர்களின் பேருந்துக்கு முன்னேயும், பின்னேயும் சைரன் சப்தம் ஒலிக்க, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து அனுப்பி அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து ஒருமுறை மனம் திறந்த தோனி, "ஏதோ செய்யக் கூடாத தவறை செய்துவிட்டு நாடு திரும்பியது போல, போலீஸ் எங்களை அழைத்துச் சென்றதை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை" என்று கூறியிருந்தார். அதற்கு முன்பே, ராஞ்சியில் புதிதாக தோனி கட்டிக் கொண்டிருந்த வீட்டின் கட்டிட பணிகளை ரசிகர்கள் சேதப்படுத்தினர். மேலும் தோனியின் உருவப்படத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

இது நிரந்தரம் அல்ல

இது நிரந்தரம் அல்ல

இந்த நிலையில், உலகக் கோப்பை தோல்வி குறித்து தற்போது பேசியுள்ள இர்பான் பதான், "எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. வெஸ்ட் இண்டீசில், உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு என்னிடமும், மகேந்திர சிங் தோனியிடமும் வந்த கேப்டன் டிராவிட், 'நாம் அனைவரும் வருத்தத்தோடு இருப்பதை நான் அறிவேன். நாம் எல்லோரும் ஒரு படத்திற்கு செல்லலாம்' என்றார். நாங்களும் திரைப்படம் பார்க்கச் சென்றோம். பிறகு அவர் எங்களிடம், ஆம்.. நாம் உலகக் கோப்பையை இழந்துவிட்டோம். நாம் இனி ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். இதுவே நிரந்தர முடிவு அல்ல. வாழ்க்கை மிகவும் பெரியது. நாம் நாளை மீதும் திரும்பி வருவோம். டிராவிட் அப்படியொரு அருமையான கேரக்டர்.

அது தான் டிராவிட்

அது தான் டிராவிட்

இப்போது அவர் இந்திய 'ஏ' அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். ஒருவேளை அங்கு ஏதாவது ஒரு வீரரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனில், நிச்சயம் முதல் ஆளாய் டிராவிட் அந்த வீரருக்கு பக்கபலமாக நிற்பார். அந்த வீரரை உற்சாகப்படுத்தி, நம்பிக்கை ஏற்படுத்தி மேலே கொண்டு வந்துவிடுவார். அது தான் டிராவிட்" என்று பதான் புகழ்ந்துள்ளார்.

Story first published: Thursday, July 8, 2021, 22:13 [IST]
Other articles published on Jul 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+