Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குத்திக்காட்டிய அஸ்வின்.. மறைமுகமாக தாக்கிய கோலி.. இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி?.. 5 காரணங்கள்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெல்ல 5 முக்கியமான காரணங்கள் இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்தது.

ஆனால் அதற்கான சுவடே இல்லாமல் தற்போது இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது. இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெல்ல முக்கிய காரணம் என்றால் அது இந்திய அணியின் முறையான பிளானிங். ஒவ்வொரு வீரருக்கும் ஏற்றபடி இந்திய அணி இந்த போட்டியில் திட்டம் வகுத்து இருந்தது. ரூட்டின் ஸ்வீப் ஷாட்களுக்கு எதிராக பீல்டிங் நிறுத்தியது தொடங்கியது லாரன்ஸ் இறங்கி வந்து அடிப்பதை தடுப்பது அவரை அனைத்துக்கும் எதிராக திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.

ரூட்

ரூட்

அதிலும் ரூட்டை அக்சர் பட்டேலை வைத்து இந்திய அணி சமாளித்தது. அக்சர் பட்டேலின் ஒரே லைனில் வீசும் வேகமான ஸ்பின் ஸ்டைல் இங்கிலாந்து அணிக்கு பெரிய அளவில் சிம்ம சொப்பனமாக இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் எதிராக இந்திய அணி சரியாக திட்டம் வகுத்து இருந்தது.

இந்திய பிட்ச்

இந்திய பிட்ச்

அடுத்ததாக இந்திய அணி பிட்சை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. பவுலிங் என்று இல்லாமல் பேட்டிங் செய்யும் போதும் பிட்சை இந்திய அணி நன்றாக பயன்படுத்தியது. முக்கியமாக அண்ணா எண்டில் இந்திய அணி பேட்டிங் செய்த போது அதிக ரன் அடிக்காமல், பட்டாபிராமன் எண்டில் இந்திய அணி நன்றாக பேட்டிங் செய்தது. பெரிய அளவில் ரிஸ்க் எடுக்காமல் இங்கிலாந்து வீரர்கள் மீது இந்திய வீரர்கள் பிரஷர் போட்டனர்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு இது ஒரு காரணம் ஆகும். மூன்றாவதாக இந்திய அணி வேறு வேறு ஸ்டைல் ஸ்பின் பவுலர்களை பயன்படுத்தினார்கள். அஸ்வின், அக்சர், குல்தீப் என்று மூன்று பேருமே வித்தியாசமாக பவுலிங் செய்தனர். ஆனால் இங்கிலாந்து அணியில் ரூட், லீச், மொயின் ஆகியோர் பந்து வீசினாலும் இதில் பெரிய அளவில் வேரியேஷன் இல்லை.

பெரிய அழுத்தம்

பெரிய அழுத்தம்

இந்திய அணிக்கு இவர்களால் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இது போக இந்திய அணியின் பீல்டிங் செட்டப் சிறப்பாக இருந்தது. ரூட்டுக்கு நின்ற பீல்டிங் தொடங்கி போக்ஸ் விக்கெட்டை எடுக்க நிறுத்தப்பட்ட பீல்டிங் என்று இந்திய அணியின் கேப்டன் கோலி இன்று களத்தில் மேஜிக் நிகழ்த்தினார்.

காரணம்

காரணம்

இதெல்லாம் போக இந்திய அணியில் ரோஹித் சர்மா, கோலி, அஸ்வின் , அக்சர் போல இங்கிலாந்து அணியில் மேட்ச் வின்னர்கள் யாரும் இல்லை. இங்கிலாந்து அணியில் அணியை தூக்கி சுமக்க கூடிய வகையில் வீரர்கள் யாரும் பங்களிப்பை நிகழ்த்தவில்லை. இதுவும் முக்கிய காரணம் ஆகும் .

கோலி பேச்சு

கோலி பேச்சு

இதைத்தான் அஸ்வின், கோலி இருவரும் குறிப்பிட்டனர். இந்திய அணியின் வெற்றிக்கு டாஸ், பிட்ச் காரணம் என்று சொல்ல முடியாது.சூழ்நிலையை இந்திய வீரர்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டனர். இதனால்தான் இந்திய அணி வென்றது என்று இங்கிலாந்து அணியை தாக்கி பேசும் வகையில் குறிப்பிட்டு இருந்தனர்.

Story first published: Tuesday, February 16, 2021, 17:29 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+