ஹாங்காங் அணிக்கே திணறினாலும் மனசு விட மாட்டேங்குதே… பாகிஸ்தானை இந்தியா ஜெயிச்சுருமா?
Recommended Video

இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி.. இந்தியா ஜெயிக்குமா? இல்லையா?
துபாய் : ஆசிய கோப்பை போட்டிகளில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் ஹாங்காங் அணியுடன் போராடி வெற்றி பெற்ற இந்திய அணி, வலுவான பாகிஸ்தான் அணியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை காண இந்திய ரசிகர்கள் கவலையுடனும், பாகிஸ்தான் ரசிகர்கள் ரசிகர்கள் ஆவலுடனும் இருக்கிறார்கள்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி எப்பொழுதும் "மதர் ஆப் ஆல் பேட்டில்ஸ்" என்று அழைக்கப்படுவதுண்டு. அதாவது அனைத்து போட்டிகளிலும் இந்த போட்டிக்கு முதன்மையான இடம் உண்டு என்பதன் அர்த்தமே அது.

ஹாங்காங் அணியை வீழ்த்திய இந்தியா - பாக்.:
இரண்டு அணிகளும் தனது முதல் போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அணி போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணியோ தட்டு தடுமாறி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாக். பலம் பந்துவீச்சு :
இந்திய அணியின் முதலாவது போட்டி முடிவு,கண்டிப்பாக பாகிஸ்தான் வீரர்களுக்கு மனதளவில் பெரும் நம்பிக்கையை அளித்திருக்கும். மேலும் விராட் கோஹ்லி இல்லாத இந்திய அணியை வீழ்த்துவது எளிது என்பது அவர்களின் எண்ணமாகும். அவர்களின் பெரும் பலம் அவர்களது பந்துவீச்சு. அதனை சமாளித்து ஆடினால் பாகிஸ்தானை வீழ்த்துவது சுலபம்.

திட்டம் இருக்கா? :
பொதுவாக பார்த்தால் இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி அனைத்து வகையிலும் முன்னிலையில் உள்ளது. ஆனால் அனுபவமும், திறமையும் ஒருங்கே கொண்ட இந்திய அணி சரியான முறையில் திட்டமிட்டு செயலாற்றினால் கண்டிப்பாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தலாம்.
நம்பிக்கை இருக்கு :
பும்ரா,பாண்டியா,ராகுல் ஆகியோரின் வருகை இந்திய அணிக்கு பலம் சேர்க்கும். தவான் மற்றும் ராயுடுவின் பேட்டிங் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இறுதி கட்டத்தில் ஜாதவின் அதிரடி கை கொடுக்கும்.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கண்டிப்பாக வெற்றி நமதே.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு கடுமையான சவால் நிறைந்த போட்டியை சந்திக்கப்போகிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
Story first published: Wednesday, September 19, 2018, 13:33 [IST]
Other articles published on Sep 19, 2018


Click it and Unblock the Notifications