ஜெய்ஷா எந்த அணிக்காக விளையாடினார்?கங்குலியை எதற்காக நீக்கினார்கள் தெரியுமா?ஆனந்த் ஸ்ரீனிவாசன் கேள்வி
சென்னை : வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணை இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது அதற்காக தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.இம்முறை அரசியல், தேர்தல் களத்தில் மட்டுமில்லாமல் கிரிக்கெட் பக்கமும் எட்டிப் பார்த்திருக்கிறது.
இதற்கு காரணம் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முன்னாள் தலைவருமான அமித்சாவின் மகன் ஜெய்ஷா தான். பிசிசிஐ செயலாளராக அவர் பணியாற்றுவது தான் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இதனால் அரசியல் கட்சிகள் ஜெய்ஷாவை நோக்கியும் கேள்வியை கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் தொடர்பு துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போது காங்கிரஸ் கட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சீட் வழங்கப்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு காட்டமாக பதில் அளித்த ஆனந்த் சீனிவாசன், பாஜகவில் இருக்கும் சிந்தியா குடும்பத்தினருக்கு தற்போது சீட்டு வழங்கப்படவில்லையா என்று கேள்வி எழுப்பினார். அதை விடுங்கள் பிசிசிஐயின் செயலாளராக ஜெய்ஷா இருக்கிறாரே அவருக்கு எப்படி இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. குஜராத் அணிக்காக ஜெயிஷா விளையாடி இருக்கிறாரா?
இல்லை சௌராஷ்டிரா அணிக்காக ஜெய்ஷா ரஞ்சிப் போட்டியில் விளையாடினாரா ? குறைந்தபட்சம் ராஜ்காட் நகருக்காக ஏதேனும் உள்ளூர் போட்டிகள் ஆவது விளையாடிருக்காரா ? முதலில் ஜெய்ஷாவுக்கு பேட் எப்படி பிடிக்க வேண்டும் என தெரியுமா? இப்படி எதுவுமே தெரியாத ஜெய்ஷா எப்படி செயலாளர் பொறுப்பில் அமர வைக்கப்பட்டார்.
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி செயல்படுகிறார். ஆனால் அவரை வெறும் அலங்காரத்திற்காக தான் வைத்திருக்கிறார்கள். அனைத்து வேலையும் ஜெயிஷா தான் செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் கங்குலி.அவ்வளவு திறமையானவர்! ஆனால் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் அதற்கான காரணம் என்ன என்று தெரியுமா?
பாஜகவில் சேரும்மாறு கங்குலியை வற்புறுத்தினார்கள். அவர் முடியாது என கூறியதால் தற்போது பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து தூக்கி விட்டார்கள் என்று ஆனந்த் சீனிவாசன் பதில் கூறினார். இப்படி அரசியல் களமும் கிரிக்கெட் களமும் சேர்ந்து சூடு பிடித்து வருவது ரசிகர்களை குதூகல படுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications