Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது கோலி உருவாக்கியது.. இல்லை இது ரஹானே கேப்டன்சி.. பரபரத்த விவாதம்.. பிசிசிஐ எடுத்த "அந்த" முடிவு!

டெல்லி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்றதன் மூலம் இந்திய அணியில் ரஹானேவின் மதிப்பு உயர்ந்து உள்ளது.

பல திருப்பங்கள், சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் வெற்றி கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணிவென்று சாதனை படைத்துள்ளது.

வெற்றி

வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வென்றதன் மூலம் இந்திய அணியில் ரஹானேவின் மதிப்பு உயர்ந்து உள்ளது. இதன் மூலம் ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காத டெஸ்ட் கேப்டனாக ரஹானே உருவெடுத்துள்ளார். இருக்கிற வீரர்களை வைத்தே ஒரு அணியை வெற்றிபெற வைக்க முடியும் என்பதை ரஹானே நிரூபித்துள்ளார்.

பிசிசிஐ

பிசிசிஐ

இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கான அணி தேர்வு நேற்று நடந்த போது இந்திய அணியின் வெற்றி குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. ரஹானே சிறப்பாக கேப்டன்சி செய்துள்ளார். முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார். அதுவும் ஆஸ்திரேலியாவில் இந்தியாவை வெற்றிபெற வைத்துள்ளார் என்று சிலர் பாராட்டி உள்ளனர்.

கோலி

கோலி

இதில் சில பிசிசிஐ நிர்வாகிகள் கோலியின் கேப்டன்சியை கேள்வி எழுப்பும் வகையில் பேசி உள்ளனர். கோலியின் தலைமைக்கு கீழ் முதல் டெஸ்டில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி பேசி உள்ளனர். ரஹானேவின் டெஸ்ட் கேப்டன்சி தொடரலாம் என்பதை மீட்டிங்கில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.

தேர்வுக்குழு

தேர்வுக்குழு

இந்த வெற்றி முழுக்க முழுக்க ரஹானேவின் கேப்டன்சிக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பிசிசிஐ நிர்வாகிகளும், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கோலிக்கு ஆதரவாக பேசி உள்ளனர். இது கோலி உருவாக்கிய அணி, கோலி இல்லாமல் இந்திய அணி ஆடினாலும் வீரர்கள் எல்லோரும் கோலி மூலம் வாய்ப்பு பெற்றவர்கள்.

 யார் எல்லாம்

யார் எல்லாம்

நடராஜனை அணியில் கொண்டு வந்தது கோலி, வாஷிங்க்டன் சுந்தர், சைனி, சிராஜை ஆர்சிபி மூலம் இந்திய அணிக்கு கொண்டு வந்தது கோலி, சுப்மான் கில்லை 2017லேயே பாராட்டி முதல் வாய்ப்பை கொடுத்தது கோலி.இந்த பவுலிங் படை கோலி உருவாக்கியது என்று கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்து உள்ளது.

பாராட்டு

பாராட்டு

கோலி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணியை உருவாக்கினார். அந்த இந்திய அணிதான் இது. அவர் இல்லாமல் கூட அவர் உருவாக்கிய அணி வெற்றிபெற முடியும் என்று வாதம் செய்துள்ளனர். கோலிக்கு ஆதரவாக இப்படி பலர் பேசி உள்ளனர் . இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இங்கிலாந்து தொடருக்கு கோலியே அறிவிக்கப்பட்டார்.

கோலி அறிவிப்பு

கோலி அறிவிப்பு

கோலியை மாற்றுவது குறித்து பேச கூடாது. அதைப்பற்றிய விவாதத்திற்கே இடமளிக்க கூடாது என்று முடிவு செய்துள்ளனர். ரஹானேவிற்கும் இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக நீடிப்பதில் ஆர்வம் இல்லை என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, January 20, 2021, 12:50 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+