Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினின் ரகசியத்தை அறிந்த நாதன் லைன்.. சடசடவென 4 விக்கெட்கள் சரிந்தது இப்படி தான்.. தப்பிக்குமா?

டெல்லி: இந்தியாவுடனான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸில் போட்ட திட்டத்திற்கு 2வது நாளில் தான் பலன் கிடைத்துள்ளது. இனியும் இந்தியாவுக்கு சிக்கல் தான் என தெரிகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சவாலான இலக்கை குவித்தது.

உஸ்மன் கவாஜா (81) மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (72) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

டெல்லி மைதானத்தில் 263 ரன்கள் என்பதை விரட்டிவிடலாம் என நினைத்து முதல் நாளில் களமிறங்கிய இந்திய அணி 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி முடித்திருந்தனர். மிகவும் நம்பிக்கையுடன் 2வது நாளை தொடங்கிய போது ரோகித் ஒருபுறம் பவுண்டரிகளை விரட்ட, கே.எல்.ராகுல் நிதானமாக பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் 45 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட விழாமல் ஆடி வந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்கள்

அடுத்தடுத்து விக்கெட்கள்

இந்நிலையில் காலை 10 மணிக்கு மேல் தான் ஆட்டமே தலைகீழானது. நாதன் லயனின் பந்துவீச்சில் சிக்கி இந்தியாவின் டாப் ஆர்டர் ஒட்டுமொத்தமாக சரிந்தது என்று கூறலாம். அதாவது ரோகித் சர்மா (32), கே.எல்.ராகுல் (17), புஜாரா (0), ஸ்ரேயாஸ் ஐயர் (4) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொத்தனர். இதனால் 66 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து இந்தியா திணறி வருகிறது.

எப்படி இந்த ட்விஸ்ட்

எப்படி இந்த ட்விஸ்ட்

டெல்லி பிட்ச்-ஐ பொறுத்தவரையில் முதல் நாளில் பேட்ஸ்மேன்களுக்கு சற்று உதவியாக இருக்கும். ஸ்பின்னர்கள் நன்கு டேர்ன் செய்தால் மட்டுமே விக்கெட் கிடைக்கும். ஆனால் நாட்கள் போக போக பந்துகள் அதிகம் பட்டு பிட்ச்-ல் உள்ள விரிசல்கள் நன்கு வெடித்து வரண்டு விடும். இதனால் இயற்கையாகவே ஸ்பின்னர்கள் புகுந்து விளையாடலாம். அதிலும் ஒரு குறிப்பிட்ட லெந்தில் வீசினால் மட்டுமே முடியும். அதனை தான் நாதன் லைன் இன்று செய்தார்.இதற்காக தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் கம்மின்ஸ்

பிட்ச்-ன் நிலை

பிட்ச்-ன் நிலை

பிட்ச்-ன் மைய பகுதி ( பவுன்ஸ் பகுதி ) முழுவதும் புற்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரு முனைகளிலும் புற்கள் நன்கு வெட்டப்பட்டு வறண்டு இருக்கிறது. எனவே ஸ்பின்னர்கள் பவுன்ஸிங் லெந்தில் வீசாமல், தொடர்ச்சியாக குட் லெந்தில் ஸ்டம்ப் லைன்களிலேயே வீசினால் பந்தில் ஏகபோகத்திற்கு மேஜிக் நடக்கும். இதே லெந்தில் வீசி தான் நாதன் லைன் எல்.பி.டபள்யூ, ஸ்டம்ப் அவுட்டாக்கினார். காலையிலேயே நல்ல வெயில் அடித்ததால் இன்னும் உதவியது.

Story first published: Saturday, February 18, 2023, 12:39 [IST]
Other articles published on Feb 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+