மாஸ்டர் பற்றி கேட்ட பாண்டியா.. அஸ்வின் வெளியிட்ட வாத்தி கம்மிங் வீடியோ..பின்னணியில் சுவாரசிய சம்பவம்
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மாஸ்டர் படமும் வாத்தி கம்மிங் பாடலும் தற்போது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் நிலையில் தற்போது மாஸ்டர் படம் வீரர்களுக்கு இடையே பேசு பொருளாக மாறியுள்ளது. நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பையில் தமிழக அணி வெற்றிபெற்றது.
சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் வென்ற பின் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட தமிழக வீரர்கள் இதேபோல் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார்கள். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலானது.

மாஸ்டர்
அப்போதே மாஸ்டர் படம் இந்திய வீரர்களுக்கு இடையே பேசப்பட்டது. அதன்பின் மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும் என்று ரஹானேவிற்கு அஸ்வின் பரிந்துரை செய்து இருந்தார். மாஸ்டர் படம் பாருங்கள் நன்றாக இருக்கும் என்று அஸ்வின் பரிந்துரை செய்து இருந்தார்.

ஆட்டம்
அதோடு நிற்காமல் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் மாஸ்டர் பாடலுக்கு ஆடினார். வாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வின் இன்று மைதானத்தில் நடனம் ஆடினார். கையை ஆட்டி விஜய் ஆடும் அதே பிரபல ஸ்டெப்பை இன்று அஸ்வின் ஆடினார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
வைரல்
இது மட்டுமின்றி அஸ்வினின் முகத்தை மாஸ்டர் பட போஸ்டரில் வைத்து எடிட் செய்து டிரெண்ட் செய்து இருந்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கூட அஸ்வினை மாஸ்டர் என்று குறிப்பிட்டு வைரலாக்கியது. இந்த நிலையில்தான் மாஸ்டர் படம் குறித்து பாண்டியாவும் அஸ்வினிடம் கேட்டு இருக்கிறார்.

மாஸ்டர்
மாஸ்டர் படம் குறித்தும் வாத்தி கம்மிங் பாடல் குறித்தும் அஸ்வினிடம் ஹர்திக் பாண்டியா போட்டு காட்டி உள்ளார். இதை தொடர்ந்து அஸ்வின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடி உள்ளார். இவருடன் சேர்ந்து பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் ஆடி உள்ளனர்.

ஆட்டம்
இவர்கள் மூன்று பேரும் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குல்தீப் யாதவ் போடும் காமெடியான ஸ்டெப் பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது . இந்திய வீரர்கள் மத்தியில் தமிழ் படமும், கலாச்சாரமும் சமீப காலமாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications