Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அல்லு கிளப்பிய நியூசி. கோச்.. அது இல்லாமல் ரவி சாஸ்திரி கோச் ஆகி இருக்க முடியாது.. வெளியான மர்மம்!

Recommended Video

Nettisons trolled Ravi Shastri | ரவி சாஸ்திரிக்கு எதிராக பொங்கி எழுந்த கிரிக்கெட் ரசிகர்கள்!

மும்பை : ரவி சாஸ்திரிக்கு சென்ற பயிற்சியாளர் பதவியை முன்னாள் நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் தட்டிப் பறித்து இருப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணிக்கு பயிற்சியாளர் தேர்வு நடத்துகிறோம் என சொல்லி கபில் தேவ் தலைமையிலான குழுவை அமைத்து, என்னென்னவோ காரணம் சொல்லி ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளர் பதவியில் நீட்டிப்பு செய்தது பிசிசிஐ.

ரகசியம் இது தான்

ரகசியம் இது தான்

ஆனால், நியூசிலாந்து அணியை உச்சத்துக்கு கொண்டு போன மைக் ஹெஸ்ஸன் பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான நபராக இருந்தார். அவரை வீழ்த்தி ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக்க மொக்கை காரணத்தை கண்டு பிடித்து கூறி இருக்கிறது பிசிசிஐ. அது பற்றிய ரகசியம் தற்போது வெளியாகி உள்ளது.

இறுதியில் மூவர்

இறுதியில் மூவர்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவித் தேர்வின் இறுதி சுற்றுக்கு ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் ரவி சாஸ்திரி, மைக் ஹெஸ்ஸன் மற்றும் டாம் மூடி.

கபில் தேவ் என்ன சொன்னார்?

கபில் தேவ் என்ன சொன்னார்?

இவர்களில் ரவி சாஸ்திரிக்கே மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவி கிடைத்தது. எப்படி இந்த நியமனம் நடைபெற்றது என விளக்கம் அளித்த கபில் தேவ், தாங்கள் அளித்த மதிப்பெண்கள் அடிப்படையில் மைக் ஹெஸ்ஸன், ரவி சாஸ்திரிக்கு மிக அருகே இருந்தார் என குறிப்பிட்டார்.

நீடித்த மர்மம்

நீடித்த மர்மம்

ஆனால், எந்த அளவு வித்தியாசம் என்பதை அவர் கூறவில்லை. ரவி சாஸ்திரியை விட மைக் ஹெஸ்ஸன் எந்த வகையில் குறைந்தவர்? என கேள்வி எழுப்பி விமர்சித்து வந்தனர் இந்திய ரசிகர்கள். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அவர் மேலே, இவர் கீழே

அவர் மேலே, இவர் கீழே

மைக் ஹெஸ்ஸன் பல வகைகளில் ரவி சாஸ்திரிக்கு இணையாகவும், அவரை விட திறன் வாய்ந்தவர் என்பது தெரிந்தும் ஒரு மொக்கை காரணத்தை கூறி அவரை கீழே இறக்கி, ரவி சாஸ்திரியை மேலே ஏற்றி பயிற்சியாளராக அறிவித்து இருக்கின்றனர்.

மைக் ஹெஸ்ஸன் அனுபவம்

மைக் ஹெஸ்ஸன் அனுபவம்

மைக் ஹெஸ்ஸன் தனது 22 வயதில் இருந்தே கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடாவிட்டாலும், பயிற்சி அளிப்பதில் தனி நிபுணத்துவம் பெற்றவர். அதைக் கொண்டு தான் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை எட்டிப் பிடித்தார்.

நியூசிலாந்து உச்சம்

நியூசிலாந்து உச்சம்

அவர் சுமார் ஆறு ஆண்டு காலம் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்தார். நியூசிலாந்து அணி இரண்டாம் கட்ட அணியாக இருந்த 2012ஆம் ஆண்டில் பதவி ஏற்றார். அவர் காலத்தில் தான் நியூசிலாந்து அணி உச்சம் பெற்றது. 2015 உலகக்கோப்பை தொடரில் தன் முதல் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆடியது. அதற்கு முக்கிய காரணம் ஹெஸ்ஸன் தான்.

ரவி சாஸ்திரி வீழ்த்தியது எப்படி?

ரவி சாஸ்திரி வீழ்த்தியது எப்படி?

அவராகவே தான் கடந்த ஆண்டு நியூசிலாந்து அணியை விட்டு விலகி வந்தார். அப்போதும் நியூசிலாந்து அணி இவரை அனுப்ப மனமில்லாமல் தான் அனுப்பியது. இவருக்கு அத்தனை தகுதி இருந்தும் ரவி சாஸ்திரியை வீழ்த்தியது எப்படி தெரியுமா? மைக் ஹெஸ்ஸன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை என்பதை வைத்துத் தான்!

மொக்கை காரணம்

மொக்கை காரணம்

ஆம், அந்த மொக்கை காரணத்தை காட்டி, ரவி சாஸ்திரி 80 டெஸ்ட் போட்டிகள், 150 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார் எனக் கூறி, மைக் ஹெஸ்ஸனை வேண்டாம் என கூறி இருக்கிறது பிசிசிஐ.

Story first published: Friday, August 23, 2019, 16:20 [IST]
Other articles published on Aug 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+