Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரட்சகன் ரவிச்சந்திரன் அஸ்வின்.. கடினமான பிட்ச்-ல் அசால்ட் ஷோ காட்டியது எப்படி.. சுவாரஸ்ய தகவல்!

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கு அருகில் சென்ற இந்திய அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ஒருமுறை காப்பாற்றி அசத்தியுள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி நடைபெற்றது. இதில் இந்திய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2 - 0 என ஒயிட் வாஷ் செய்துள்ளனர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை வங்கதேசத்திடம் தோற்றதே இல்லை என்ற ரெக்கார்டையும் தக்கவைத்துக்கொண்டது.

குறைவான இலக்கு

குறைவான இலக்கு

இந்தியாவின் இந்த பெருமை மிகு வெற்றிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய காரணம் என்று கூறலாம். 2வது டெஸ்டில் வங்கதேசம் நிர்ணயித்த 145 ரன்கள் இலக்கை, சுலபம் என நினைத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. டாப் ஆர்டர் வீரர்கள் அனைவருமே சொதப்ப ஒருகட்டத்தில் 74/7 ரன்கள் என திணறியது.

திணறிய இந்தியா

திணறிய இந்தியா

டாக்கா பிட்ச்சானது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்ததால் எப்படி ஆடுவதே எனத்தெரியாமல் இந்திய பேட்டர்கள் சொதப்பினர். இங்கு அதிரடியாக ஆடுவது மட்டுமே உதவும் என பண்ட்- ஐ அனைவரும் பார்த்த போது, அவரும் ஏமாற்றினார். இதனால் இந்தியாவின் கதை முடிந்தது என்றே ரசிகர்கள் கன்னத்தில் கைவைத்துவிட்டனர்.

அஸ்வின் அடித்தது எப்படி

அஸ்வின் அடித்தது எப்படி

ஆனால் அஸ்வின் மட்டும் யாருமே எதிர்பார்க்காத ஆட்டத்தை (42 ரன்கள்) வெளிப்படுத்தினார். நேரம் போக போக, பந்தில் ஏகபோகத்திற்கு டேர்னிங் ஏற்பட்டது. ஆனால் அஸ்வினை மட்டும் வங்கதேச ஸ்பின்னர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதற்கு காரணம், அஸ்வின் சுழலுக்கு ஏற்ற பிட்ச்-ல் ஸ்பெஷலிஸ்ட் என்பது தான். இந்தியா போன்று சுழலுக்கு சாதகமான களத்தில் தான் எப்போதுமே அஸ்வின் விளையாட விரும்புவார்.

நுணுக்கம்

நுணுக்கம்

இதே களத்தில் தான் அஸ்வின் 3 நாட்களாக பந்துவீசியுள்ளார் என்பதால் அவருக்கு பந்தின் தன்மை மற்றும் எப்படிப்பட்ட பந்துகள் விக்கெட் எடுக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தார். பந்து பிட்ச் ஆவதை வைத்து, எப்படி திரும்பப்போகிறது என்ற நுணுக்கங்கள் தெரியும். இதன் காரணமாக தான் அக்‌ஷர் பட்டேலும் 34 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 25, 2022, 12:25 [IST]
Other articles published on Dec 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+